திருக்கச்சிமேற்றளி
(திருமேற்றளீஸ்வரர் கோயில், பிள்ளையார்பாளையம், காஞ்சிபுரம்) ஸ்தலபுராணம்

Thirukachimetrali temple Sthalapuranam

இறைவர் திருப்பெயர்		: திருமேற்றளீஸ்வரர், திருமேற்றளிநாதர். 
இறைவியார் திருப்பெயர்		: திருமேற்றளிநாயகி.
தல மரம்			: 
தீர்த்தம்				: 
வழிபட்டோர்			: 
தேவாரப் பாடல்கள்		: 1. அப்பர்  -	மறையது பாடிப் பிச்சைக். 
				 2. சுந்தரர் -	நொந்தா ஒண்சுடரே நுனையே.

kaccimetrali temple

தல வரலாறு

 • தல வரலாறு - காஞ்சியில் 'பிள்ளையார் பாளையம்' என்னும் பகுதியில் இக்கோயில் உள்ளது; இதன் பெயரால் அவ்வீதி திருமேற்றளித் தெரு என வழங்கப்படுகிறது.

 • திருமால் சிவ சாரூப நிலையைப் பெற வேண்டி இறைவனை வழிபட்ட திருத்தலம்; இறைவன் காட்சி தந்து நின்றபோது திருமால் சிவசாரூப நிலையை வேண்ட, ஞானசம்பந்தர் இங்கு வருகைதந்து பதிகம் பாடும்போது அது கிடைக்கும் என்றும், அதுவரை இங்கிருந்து தவஞ்செய்யுமாறும் இறைவன் வரமளித்தார். அதன்படியே ஞானசம்பந்தர் வந்து பாடியபோது திருமால் சிவசாரூபம் பெற்றார் என்பது தல வரலாறு.

 • கோயில் உள்ள இத்தெருவின் நடுவில் 'உற்றுக்கேட்ட முத்தீசர் ' ஆலயம் உள்ளது; ஞானசம்பந்தர் பாடியபோது சிவபெருமான் அருகில் இருந்து கேட்பதற்காக இங்கு அமர்ந்ததாகவும் - கேட்டதாகவும் வரலாறு. (வீதியின் மேற்கோடியில் திருமேற்றளிக் கோயில் உள்ளது.)

 • உள்ளே உள்ள (கர்ப்பக்கிருகத்துள்) சந்நிதி 'ஓத உருகீசர் ' என்று வழங்கப்படுகின்றது; ஞானசம்பந்தரின் பாடலைக் கேட்டு உருகியவர் (திருமால்) இவர் எனப்படுகிறது. இதற்கு அடையாளமாக சிவலிங்கத் திருமேனியின் முன்பு இருதிருவடிகள் உள்ளன.

 • அம்பாள் சந்நிதி - (மூல திருவுருவம்) நின்ற கோலம் - காஞ்சி மண்டலம் முழுமைக்கும் அம்பாள் காமாட்சியேயாதலின், இம்மூர்த்தம் பிற்காலப் பிரதிஷ்டையாகும்.

சிறப்புகள்

 • கோயில் உள்ள இத்தெருவின் கீழ்க்கோடியில் திருஞானசம்பந்தரின் ஆலயம் உள்ளது.

 • இப்பகுதிகளில் நூற்றெட்டு ருத்ரர்கள் பூசித்ததாக செய்தி சொல்லப்படுகிறது; அதற்கேற்ப ஆனந்த ருத்ரேசம், மகா ருத்ரேசம் என்ற பெயர்களில் இப்பகுதியில் கோயில்கள் உள்ளன.

 • தனிக் கோயிலாக விளங்குவது மேற்றளிநாதர் சந்நிதியாகும்; மேற்கு நோக்கியது.

 • இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.

 • தலப்பதிகம் சுவரில் பதிக்கப்பட்டுள்ளது.

 • சம்புவராயர், விஜயநகர மன்னர்கள், பல்லவ அரசர்கள் காலக் கல்வெட்டுக்களில் இப்பகுதிகளில் வாழ்ந்த செங்குந்தர்களிடம் தறி ஒன்றுக்கு ஐந்தரை பணம் வசூலித்தது, இங்குள்ள ஒரு தெருவுக்கு 'ஏகம்பன் தெரு' என்று பெயரிட்டது முதலிய செய்திகள் காணப்படுகின்றன.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
சென்னை, கடலூர், விழுப்புரம் மற்றும் பல இடங்களிலிருந்து பேருந்து நிரம்ப உள்ளன.

தொடர்பு :

 • 09865355572, 09994585006

 • பாடல்பெற்றத் தலங்களைத் தொடர்ந்து செல்ல : -
 • < PREV <
  தொண்டை நாட்டு 1வது தலம்
  திருக்கச்சியேகம்பம் (காஞ்சிபுரம்)
  Table of Contents > NEXT >
  தொண்டை நாட்டு 3வது
  தலம் திருஓணகாந்தன்தளி


 • காஞ்சிபுரத் தலங்களைத் தொடர்ந்து செல்ல : -
 • < PREV <
  பலபத்திரராமேசம்
  Table of Contents > NEXT >
  வன்மீகநாதேசம்