திருக்கச்சிஏகம்பம் - (காஞ்சிபுரம்)

இறைவர் திருப்பெயர்	: ஏகாம்பரநாதர், திருவேகம்பர், தழுவக்குழைந்த நாதர்
இறைவியார் திருப்பெயர்	: ஏலவார்குழலி, காமாட்சியம்மை
தல மரம்		: மா மரம்(வேதம் மா மரமாக உள்ளது.)
தீர்த்தம்			: கம்பா நதி, சிவகங்கை, சர்வ தீர்த்தம்
வழிபட்டோர்		: உமையம்மை, பிரம்மா, திருமால், ருத்திரர்
தேவாரப் பாடல்கள்	: சம்பந்தர் (1`. வெந்த வெண்பொடிப் பூசு, 2. மறையானை மாசிலா, 
			     3. கருவார் கச்சி, 4. பாயுமால்விடை),
அப்பர் (
  1. கரவாடும் வன்னெஞ்சர்க்கு அரியானை,
  2. நம்பனை நகரமூன்றும்,
  3. ஓதுவித்தாய் முன்,
  4. பண்டு செய்த,
  5. பூமேலானும்,
  6. கூற்றுவன் காண்,
  7. உரித்தவன்காண் உரக்களிற்றை
), சுந்தரர்.
thirukacci_ekambam temple

தல வரலாறு

  • மா மரத்தைத் தலமரமாக(ஏ+ஆம்ரம்= மாமரம்) கொண்டுள்ளதால் ஏகாம்பரம் எனப் பெற்றது.(கச்சி என்பது ஊரின் பெயர்).
  • தவம் செய்த அம்பிகைக்கு இறைவனார் மாமரத்தினடியில் காட்சி தந்து அருள்புரிந்த பதி.
  • உமா தேவி இறைவனிடம் கேட்ட ஆகம முறைப்படி வழிபட விரும்பி இத்தலத்தில் இறைவனைப் பூசித்தார்.
  • மூலவர் - அம்பாள் பிரதிஷ்டை செய்து வழிபட்ட பிருதிவி(மணல்) லிங்கம் ஆகும்.
  • பூசிக்கும்போது, வெள்ளம் பெருக்கெடுத்து எழ, தான் மணலால் நிறுவிய லிங்கத் திருமேனியைக் காமாட்சியம்மை தழுவி அணைக்க, இறைவன் அத் தழும்பு தோன்றுவராயினர்.
  • காமாட்சியம்மை முப்பத்திரண்டு அறங்கள் செய்த இடம்.
  • சுந்தரர் இடக் கண் பெற்ற தலம்.
  • பிரம்மா, திருமால், ருத்திரர் பூசித்த இலிங்கங்கள் முறையே வெள்ளக்கம்பம், கள்ளக்கம்பம், நல்லக்கம்பம் எனப்படுகின்றன.
  • சக்தி பீடமாகிய காமக்கோடிப் பீடம் உள்ள தலம்.

சிறப்புக்கள்

  • இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
  • பஞ்ச பூதத் தலங்களில் இது பிருத்துவித் (மண்) தலம்.
  • நகரங்களில் சிறந்த காஞ்சி எனப்படுவது. (நகரேஷு காஞ்சி).
  • விகடசக்கர விநாயகர் ஆயிரங்கால் மண்டபத்தில் எழிலாக வீற்றிருக்கிறார்.
  • முத்தித் தல நகர் ஏழனுள் முக்கியமானது.
  • ஐயடிகள் காடவர்கோன், சாக்கிய நாயனார், திருக்குறிப்புத் தொண்டர் ஆகியோர் தொழுது பேறு பெற்ற தலம்.
  • பரிமேலழகர், கச்சியப்ப சிவாச்சாரியார் வாழ்ந்த தலம்.
  • காஞ்சி காமக்கோடி சங்கராசாரிய சுவாமிகள் ஸ்ரீமடம், தொண்டை மண்டலாதீனம் திருமடம் உள்ள இடம்.
  • இத்திருத்தலத்தில் பங்குனிப் பெருவிழா மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
தமிழகத்தின் முக்கிய ஊர்களில் ஒன்று. சென்னையிலிருந்தும் பிற ஊர்களிலிருந்தும் பேருந்துகள் உள்ளன.

பாடல்பெற்றத் தலங்களைத் தொடர்ந்து செல்ல : -
< PREV <
நடு நாட்டு 22வது தலம்
திருவண்ணாமலை
Table of Contents > NEXT >
தொண்டை நாட்டு 2வது தலம்
கச்சிமேற்றளி (பிள்ளைப்பாளையம்)

காஞ்சித் தலங்களைத் தொடர்ந்து செல்ல : -
< PREV <
கச்சி மயானம்
Table of Contents >NEXT >
பணாமணீசம்