திருக்கச்சிஅனேகதங்காவதம்
(காஞ்சிபுரத்தில் உள்ள திருக்கோயில்)

Tirukkachi anekatangavadam Temple sthala puranam

இறைவர் திருப்பெயர்		: அனேகதங்காவதேஸ்வரர், அனேகபேஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்		: 
தல மரம்			: 
தீர்த்தம்				: 
வழிபட்டோர்			: குபேரன், விநாயகர்.
தேவாரப் பாடல்கள்		: சுந்தரர் - தேனெய் புரிந்துழல் செஞ்சடை.

kacci anekatangavadam temple

தல வரலாறு

 • அனேகதம் - யானை. யானை முகத்தையுடைய விநாயகர் சிவலிங்கத் திருமேனியை பிரதிஷ்டை செய்து வழிபட்ட தலம்.

 • அனேகதங்காபதம் என்ற பெயரில் இமயமலைச் சாரலில் ஒரு தலமிருப்பதால், அதனின்றும் வேறுபாடு அறிய இத்தலத்தை "கச்சி அனேகதங்காவதம்" என்றழைக்கப்படுகிறது.

 • விநாயகப் பெருமான், இரணியபுரம் நகரத்திலுள்ள அசுரர்களை அழித்து, அவர்கள் கருவில் தங்கியிருந்த "வல்லபை" என்னும் அவர்களின் சத்தியைப் பிரித்து மணம் புரிந்து கொண்டார். அசுரர்களை அழிப்பதற்கு புறப்படுமுன் தம் பெயரில் "அனேகபேஸ்வரர்" என்று சிவலிங்கம் ஸ்தாபனம் செய்து வழிபட்டுப் புறப்பட்டுச் சென்றார். விநாயகர் பிரதிஷ்டை செய்த அம்மூர்த்தியே இன்று அனேகதங்காவதேஸ்வரர் என்று திருநாமம் கொண்டு விளங்குகிறார். (அனேகபம் = யானை).

 • இது குபேரன் வழிபட்ட பெருமை மிக்க தலமும் கூட.

 • இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.

சிறப்புக்கள்

 • சுந்தரர் பாடியுள்ள இத்தலப்பதிகம் - ' தேனெய் புரிந்துழல்' என்று தொடங்குவது; அழகான கும்மிமெட்டில் அமைந்துள்ளது. பாடி அனுபவிக்கும்போது அச்சுவை வெளிப்படுகின்றது.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து, புத்தேரித் தெரு வழியாகக் கயிலாயநாதர் கோயிலுக்குச் செல்லும் வழியில் சென்று இக்கோயிலை அடையலாம்.

தொடர்பு :

 • 044-2722 2084

 • பாடல்பெற்றத் தலங்களைத் தொடர்ந்து செல்ல : -
 • < PREV <
  தொண்டை நாட்டு 3வது
  தலம் திருஓணகாந்தன்தளி
  Table of Contents > NEXT >
  தொண்டை நாட்டு 5வது தலம்
  திருக்கச்சிநெறிக்காரைக்காடு


 • காஞ்சிபுரத் தலங்களைத் தொடர்ந்து செல்ல : -
 • < PREV <
  அமரேஸ்வரம்
  Table of Contents > NEXT >
  கயிலாயநாதர் கோயில்