திருஇராமேச்சுரம் - (இராமேஸ்வரம்)

 
இறைவர் திருப்பெயர்	: இராமநாதர் 
இறைவியார் திருப்பெயர்	: மலைவளர்காதலி, பர்வதவர்த்தினி 
தல மரம்			:  
தீர்த்தம்			: அக்னி தீர்த்தம்(கடல்), இராம, இலட்சுமண, 
			 தனுஷ்கோடி முதலான 22 தீர்த்தங்கள் 
வழிபட்டோர்		: இராமர், இலட்சுமணன், சீதாதேவி, அனுமான் 
தேவாரப் பாடல்கள்	: 1. சம்பந்தர் -	1. அலைவளர் தண்மதி, 
					2. திரிதரு மாமணி. 
 
			 2. அப்பர்  -	1. பாசமுங் கழிக்க கில்லா அரக்கரை. 

rameswaram temple

தல வரலாறு

 • இராவணனைக் கொன்றப் பழி தீர, இராமபிரான் பூஜித்தது. பூஜிக்கச் சிவலிங்கம் கொண்டுவரும் பொருட்டு, அனுமான் காசிக்குச் சென்று வரத் தாமதம் ஆகிய நிலையில், சீதாதேவியார், மணலால் பிடித்துவைத்த இலிங்கத்தை இராமபிரான் பூஜித்தார். அனுமான், கொண்டுவந்து சேர்த்த இலிங்கம், காசி விஸ்வநாதர் எனத் தனியாக வேறிடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

 • இலங்கைக்குச் செல்ல இராமபிரான் அணைகட்டிய இடம் சேது எனப்படுகிறது. அங்கே தன் வில்லினால் தோண்டிய தீர்த்தம் தனுஷ்கோடியாகும்.சேது ஸ்நானம் செய்பவர்கள் இங்குதான் செய்தல்வேண்டும்.

rameswaram temple inside view

சிறப்புகள்

 • இது, ஜோதிர்லிங்கத் தலங்கள் பன்னிரண்டனுள் ஒன்றாகும்.

 • பாண்டியர்கள் மற்றும் விஜயநகர மன்னர்கள் கால கல்வெட்டுகள் உள்ளன.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
இராமேஸ்வரம் இரயில்நிலையத்திலிருந்து 1.5-கி. மீ. தூரத்தில் இக்கோவில் உள்ளது. தமிழ்நாட்டின் அனைத்து பெருநகரங்களிலிருந்தும் பஸ் வசதி உள்ளது. தனுஷ்கோடி செல்பவர்கள் தனுஷ்கோடி இரயில் நிலையம் வரை இரயிலில் செல்வதுதான் சிறந்தது. அங்கிருந்து 3-கி. மீ. தூரத்தில் தனுஷ்கோடி தீர்த்தம் உள்ளது.

< PREV <
பாண்டி நாடு 7வது
தலம் திருப்புனவாயில்
Table of Contents > NEXT >
பாண்டி நாடு 9வது
தலம் திருவாடானை