|
Home > Temples of India > pADal peRRa sthalam
திருஈங்கோய்மலை (திருவிங்கநாதமலை)
இறைவர் திருப்பெயர் : மரகதாசலேசுவரர், மரகத நாதர்.
இறைவியார் திருப்பெயர் : மரகதவல்லி.
தல மரம் :
தீர்த்தம் :
வழிபட்டோர் : அம்பிகை, அகத்தியர் (ஈ வடிவில்) முதலியோர்.
தேவாரப் பாடல்கள் : சம்பந்தர் - வானத்துயர்தண் மதிதோய்சடைமேல்.
தல வரலாறு
சிறப்புக்கள்
அம்பிகை வழிபட்டதால் இதற்கு சிவசக்திமலை என்றும் பெயர் வழங்குகிறது.
சிவலிங்கம், பெயருக்கேற்ப மரகதக்கல் போல நல்ல பச்சை நிறத்தில் பளபளப்பாக இருக்கிறது.
நக்கீரர் இம்மலை மீதுள்ள பெருமான் மீது 'ஈங்கோய் எழுபது ' என்ற நூலைப் பாடிப் பரவியுள்ளார்.
சிவராத்திரியன்று அல்லது முன்நாளில் சூரிய ஒளி லிங்கத்தின் மீது படுகின்றது.
ஈங்கோய்மலைக் கோயில் அருகில் உள்ள வாட்போக்கிமலை, கடம்பந்துறையை பார்க்கிறது; கடம்பந்துறைக் கோயில் ஈங்கோயைப் பார்த்த வண்ணமுள்ளது. இம்மூன்று மலைகளும் சோமாஸ்கந்த வடிவில் உள்ளதென்பர். ஒரேநாளில் காலையில் கடம்பர் கோயிலையும் (கடம்பத்துறை) நண்பகலில் வாட்போக்கியையும், மாலையில் திருஈங்கோய் மலையையும் தரிசித்தல் விசேஷமானது என்பர். 'காலைக் கடம்பர், மத்தியானச் சொக்கர், அந்தி ஈங்கோய்நாதர் ' என்னும் வழக்குள்ளது. இவ்வாறு தரிசிப்பது எல்லா நாட்களும் ஏற்றவையெனினும் கார்த்திகைச் சோமவாரம் சிறப்பான நாளாகச் சொல்லப்படுகிறது.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
திருச்சி - சேலம் பெருவழிப் பாதையில் முசிறிக்கு அண்மையில் இத்தலம் உள்ளது. திருச்சி - நாமக்கல் - சேலம் பேருந்துகளில் செல்லலாம்.
|