|
Home > Temples of India > pADal peRRa sthalam
இடையாறு ( T. எடையார் )

இறைவர் திருப்பெயர் : மருதீஸ்வரர், இடையாற்றீசர்.
இறைவியார் திருப்பெயர் : ஞானாம்பிகை, சிற்றிடைநாயகி.
தல மரம் : வன்னி
தீர்த்தம் :
வழிபட்டோர் : சுகர்முனிவர்.
தேவாரப் பாடல்கள் : சுந்தரர்.
தல வரலாறு
சுகர் முனிவர் வழிபட்டது.
- கோயிலில் கிடைத்த கல்வெட்டில் இவ்விறைவன் 'மருதந்துறை உடைய நாயனார் ' என்று குறிக்கப்படுகின்றார்.
- இங்குள்ள முருகனின் (சண்முகர்) பெயரினை 'கலியுகராமப் பிள்ளையார் ' என்று கல்வெட்டு குறிப்பிடுகிறது.
சிறப்புக்கள்
- மேற்கு நோக்கிய சந்நிதி. கொடிமரமில்லை.
- இக்கோயிலில் சோழர், பாண்டியர், விஜயநகர மன்னர் காலத்திய கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன.
- இக்கோயில் கி.பி. 1471-ல் ஒரிசா மன்னன் ஒருவனால் அழிக்கப்பட்டு, பின்பு 10 ஆண்டுகள் கழித்து சாளுவ நரசிம்மனின்
பிரதிநிதியால் கட்டப்பட்டதாகக் கல்வெட்டின் மூலம் தெரிகிறது.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
திருக்கோயிலூரிலிருந்து திருவெண்ணெய்நல்லூர் வழியாக அரசூர் செல்லும் பாதையில் சித்தலிங்க மடத்தையத்து இடையாறு உள்ளது.
|