திருஇடைச்சுரம் - (திருவடிசூலம்) தலவரலாறு

Thiruidaichuram (thiruvadichoolam) Temple sthala puranam

இறைவர் திருப்பெயர்		: ஞானபுரீஸ்வரர், இடைச்சுரநாதர். 
இறைவியார் திருப்பெயர்		: கோபரத்னாம்பிகை, இமயமடக்கொடி. 
தல மரம்			: வில்வம்
தீர்த்தம்				: 
வழிபட்டோர்			: அம்பாள், சனற்குமாரர், கெளதம ரிஷி ஆகியோர். 
தேவாரப் பாடல்கள்		: சம்பந்தர் - வரிவள ரவிரொளி (1-78).

idaiccuram temple

தல வரலாறு

  • தொண்டை நாட்டுப் பாடல் பெற்றத் தலங்களில் இது 27வது தலமாகும்.

  • மக்கள் வழக்கில் தற்போது "திருவடிசூலம்" என்று வழங்குகிறது.

சிறப்புகள்

  • மலைகள் சூழ்ந்த இயற்கை சூழலில் கோயில் அமைந்துள்ளது.

  • கருங்கல் கட்டமைப்புடைய பழைமையான திருக்கோயில்; கருவறை அகழி அமைப்புடையது.

  • பார்வதிதேவி பசுவடிவில் பால் சொரிந்து இறைவனை வழிபட்டத் தலம்.

  • கோயிலில் நால்வர் பிரதிஷ்டை உள்ளது.

  • மூலவர் - மரகத (பச்சைக்கல்) சிவலிங்கத் திருமேனி; சுயம்பு மூர்த்தி. தீபாராதனையின்போது தீபம் மரகத மேனியில்பட்டு பிரகாசிப்பது மனதிற்கு நிறைவைத் தருகிறது. இத்தல சம்பந்தர் தேவார பதிகம் முழுவதிலும் மரகதலிங்கத்தின் அழகு புகழ்ந்து பாடப்பட்டுள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
செங்கற்பட்டு - திருப்போரூர் சாலையில் இத்தலம் உள்ளது. "திருவடிசூலம்" பேருந்து நிறுத்தத்திலிருந்து உள்ளே 1-கி. மீ. சென்றால் ஊரை அடையலாம். வாகனங்களில் கோயில் வரை செல்லலாம்.

தொடர்பு :

  • 044 - 27420485, 09444523890

< PREV <
தொண்டை நாட்டு 26வது தலம்
திருக்கச்சூர் (ஆலக்கோவில்)
Table of Contents > NEXT >
தொண்டை நாட்டு 28வது
தலம் திருக்கழுக்குன்றம்