திருஎருக்கத்தம்புலியூர்
(ராஜேந்திரப்பட்டணம்)

இறைவர் திருப்பெயர்		: நீலகண்டேஸ்வரர், சுவேதார்க்கவனேஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்		: அபீதகுஜநாயகி, நீலமலர்கண்ணி, நீலோற்பலாம்பாள்.
தல மரம்			: வெள்ளெருக்கு.
தீர்த்தம்				: நீலோற்பலதீர்த்தம்.
வழிபட்டோர்			: வியாக்ரபாதர், உருத்திரசன்மர் ஆகியோர்.
தேவாரப் பாடல்கள்		: சம்பந்தர் - படையார் தருபூதப்.

erukkattampuliyur temple

தல வரலாறு

 • வெள்ளெருக்கைத் தலமரமாகக் கொண்டுள்ள தலமாதலின் எருக்கத்தம்புலியூர் என்று பெயர் பெற்றது.

 • வியாக்ரபாதர் (புலிக்கால் முனிவர்) பூசித்த தலங்கள் 'புலியூர்' என்ற பெயருடன் விளங்குகின்றன. அவற்றுள் இத்தலமும் ஒன்று. (ஏனையவை:- (1) பெரும்பற்றப்புலியூர் (சிதம்பரம் - தென்புலியூர்) (2) திருப்பாதிரிப்புலியூர் (வடபுலியூர்) (3) ஓமாம்புலியூர் (4) பெரும்புலியூர்.)

 • உருத்திரசன்மர் சிவனை வழிபட்டு ஊமை நீங்கப்பெற்ற பெருமையுடைய தலம்.

சிறப்புகள்

 • திருஞானசம்பந்தர் பாடல் பெற்றத் திருத்தலம்.

 • இவ்வூருக்குக் கிழக்கே ஒரு சிவன் கோவில் தனியாக உள்ளது. இஃது, கீழ்க்கோட்டூர் மணியம்பலமாகும்; இது, கருவூர்த்தேவர் திருவிசைப்பாப் பெற்றது.

 • உருத்திரசன்மர் உருவம் கோயிலில் உள்ளது.

 • திருநீலகண்ட யாழ்ப்பாணரின் அவதாரப்பதி.
  	அவதாரத் தலம்	: திருஎருக்கத்தம்புலியூர் (இராசேந்திரப்பட்டினம்)
  	வழிபாடு		: குரு வழிபாடு.
  	முத்தித் தலம் 	: திருநல்லூர்ப்பெருமணம்
  	குருபூசை நாள் 	: வைகாசி - மூலம்.
  

 • திருநீலகண்டயாழ்ப்பாணருடைய திருவுருவம் மதங்க சூளாமணியாருடன் கூடியுள்ளது.

 • திருநீலகண்ட யாழ்ப்பாணருக்கு தனிச் சந்நிதி திருக்கோயிலின் எதிர்புறம் குளக்கரையில் உள்ளது.

 • வெளிச்சுற்றில் இடப்புறமாக நால்வரும் எழுந்தருளியுள்ளனர்.

 • தட்சிணாமூர்த்திக்கு மேலே சிறிய கோயில் அமைப்பில் சட்டைநாதர் தரிசனம் தருகிறார்.

அமைவிடம்

	அ/மி. நீலகண்டேசுவரர் திருக்கோயில், 
	இராஜேந்திரப்பட்டினம் - 608 703.
	கருவேப்பிலக்குறிச்சி (வழி), 
	விருத்தாச்சலம் வட்டம்,
	கடலூர் மாவட்டம்.

	தொலைபேசி : +91-94440 63806.

மாநிலம் : தமிழ் நாடு
இஃது, விருத்தாசலம் - ஜயங்கொண்டம் பேருந்துச் சாலையில் உள்ள தலம். சென்னை - தஞ்சை நெடுஞ்சாலையில் சேத்தியாதோப்பை அடுத்து, ஸ்ரீமுஷ்ணம் - விருத்தாசலம் பாதையில் சென்று ஸ்ரீ முஷ்ணத்தை அடுத்துள்ள இத்தலத்தை அடையலாம்.

தொடர்பு :

 • 04143 - 243533, 09360637784.

< PREV <
நடு நாட்டு 3வது தலம்
திருக்கூடலையாற்றூர்
Table of Contents > NEXT >
நடு நாட்டு 5வது தலம்
திருத்தினைநகர் (தீர்த்தனகிரி)

 • திருநீகண்ட யாழ்ப்பாண நாயனார் வரலாறு (மூலம்)