திருத்தருமபுரம்

இறைவர் திருப்பெயர்		: தருமபுரீஸ்வரர், யாழ்முரிநாதர்.
இறைவியார் திருப்பெயர்		: மதுரமின்னம்மை, தேனமிர்தவல்லி.
தல மரம்			: வாழை.
தீர்த்தம்				: தரும தீர்த்தம், பிரம தீர்த்தம்.
வழிபட்டோர்			: நான்முகன்.
தேவாரப் பாடல்கள்		: சம்பந்தர் - மாதர் மடப்பிடி யும்மட.
darumapuram temple

தல வரலாறு

  • மார்க்கண்டேயரின் உயிரைப் பறித்த பிழை நீங்க எமன் (தருமன் - தருமராஜா) வழிபட்ட பதியாதலின் தருமபுரம் என்று பெயர் பெற்றது.

சிறப்புக்கள்

  • ஞானசம்பந்தரின் யாழ்முரிப் பதிகம் பெற்ற சிறப்புடைய தலம்.

  • இத்தலத்தில்தான் திருஞான சம்பந்தரின் இசை, திருநீலகண்ட யாழ்ப்பாணரின் யாழிசையில் அடங்காமையை இறைவன் வெளிப்படுத்தினார்.

  • திருநீலகண்ட யாழ்ப்பாணரின் அவதாரத் தலம்.

  • சுவாமி சந்நிதி முகப்பு வாயில் மேலே ஒருபுறம் சம்பந்தர் பாட, யாழ்ப்பாணர் யாழ் வாசிக்க அவர் மனைவி பக்கத்தில் நிற்பது போலவும், மறுபுறம் சம்பந்தர், யாழுடன் பாணர், அவர் மனைவி ஆகியோருடன் நிற்பதுபோலவும் சுதை வேலைப்பாடுகள் உள்ளன.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
திருநள்ளாற்றிலிருந்து காரைக்கால் செல்லும் பேருந்துச் சாலையில் 2 கி. மீ. சென்று வலப்புறமாக பிரியும் (பெயர்ப் பலகை உள்ளது) பாதையில் சென்றால் இக்கோயிலை அடையலாம். கோயல் வரை வாகனங்களில் செல்லலாம்.

< PREV <
காவிரி தென்கரை 50வது
தலம் திருத்தெளிச்சேரி
Table of Contents > NEXT >
காவிரி தென்கரை 52வது
தலம் திருநள்ளாறு