திருச்சுழியல் (திருச்சுழி)

இறைவர் திருப்பெயர்		: திருமேனிநாதர், சுழகேசர், பிரளயவிடங்கர், 
				  தனுநாதர், மணக்கோலநாதர், கல்யாணசுந்தரர், பூமீஸ்வரர்.

இறைவியார் திருப்பெயர்		: துணைமாலையம்மை, சகாயவல்லி, சொர்ணமாலை, 
				  முத்துமாலையுமையாள், மாணிக்கமாலை.

தல மரம்			: அரசு, புன்னை.
தீர்த்தம்				: பாவகிரி நதி, கவ்வைக்கடல், பூமிதீர்த்தம், சூலதீர்த்தம்.

வழிபட்டோர்			: திருமால், இந்திரன், பிரமன், சூரியன், பூமிதேவி, கௌதமர், 
				  அகலிகை, கண்வமுனிவர், அருச்சனன், சித்திராங்கதை, 
				  சேரமான் பெருமான்.

தேவாரப் பாடல்கள்		: சுந்தரர் - ஊனாய்உயிர் புகலாய்அக.
thiruchuzhiyal temple

தல வரலாறு

  • சிவபெருமான் ஒருசமயம் பிரளயத்தைச் சுழித்துப் பூமிக்குள் புகச் செய்தார் ஆதலின் (திருச்)சுழியல் என்று பெயர் பெற்றது.

சிறப்புக்கள்

  • மூலவர் சுயம்பு லிங்க திருமேனி.

  • அம்பாள் சந்நிதியில் உட்புறத்தில் அம்பாளுக்கு எதிரில் ஸ்ரீ சக்கரம் கல்லில் வடிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.

  • அம்பாள்; திரிபங்கி லட்சண அமைப்பில், இடுப்பு, கழுத்து, இடக்கால் சற்று சாய்ந்து நடன அமைப்பில் தரிசனம்.

  • திருவண்ணாமலையில் தங்கி அவனிக்கு ஞானதீபமாய் விளங்கிய ஸ்ரீ ரமண மகரிஷி அவதரித்த தலம்.

  • திருச்சுழியல், மதுரை, இராமேஸ்வரம் ஆகிய மூன்று கோயில்களும் ஒரே அமைப்புடைய கட்டுமானம் என்பர்.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
இராமநாதபுரம், பரமக்குடி, அருப்புக்கோட்டை சாலையிலும், அருப்புக்கோட்டையிலிருந்து 15.கி.மீ. - ல் உள்ளது.

< PREV <
பாண்டி நாட்டு 11வது
தலம் திருப்பூவனம்
Table of Contents > NEXT >
பாண்டி நாட்டு 13வது
தலம் திருக்குற்றாலம்