|
Home > Temples of India > pADal peRRa sthalam
திருச்சோற்றுத்துறை
இறைவர் திருப்பெயர் : ஓதனவனேஸ்வரர், தொலையாச் செல்வர், சோற்றுத்துறை நாதர்.
இறைவியார் திருப்பெயர் : அன்னபூரணி, ஒப்பிலாம்பிகை.
தல மரம் :
தீர்த்தம் : காவிரி.
வழிபட்டோர் : இந்திரன், சூரியன், கௌதமர் ஆகியோர்.
தேவாரப் பாடல்கள் : மூவர்.
தல வரலாறு
சிறப்புக்கள்
- இது சப்தஸ்தானத் தலங்களுள் ஒன்று.
- ஊர்ப்பெயருக்கேற்ப சப்தஸ்தான விழாவில் ஏழூர்வலம் வரும் அடியார்களுக்கு இங்கு அன்னம் பாலிப்பு நடைபெறுகிறது.
- தலப் பதிகக் கல்வெட்டுக்கள் உள்ளன.
- இத்தலத்திற்குச் மேலும் சிறப்பு சேர்க்கும் மூர்த்தியாக அர்த்த மண்டப நுழைவு வாயிலில் பெரிய ஆறுமுகப் பெருமான் மூர்த்தம் உள்ளது.
- தனிக்கோயிலில் அம்பாள் திருமணக்கோலமாக காட்சி தருகிறாள்.
- முதலாம் ஆதித்த சோழன் இக்கோயிலுக்குப் பல திருப்பணிகளைச் செய்துள்ளான். சோழர் காலக் கல்வெட்டுக்கள் இக்கோயிலுக்கு அம்மன்னர்கள் விளக்கெரிக்கவும்,
நிவேதனத்திற்காகவும், விழாக்கள் எடுக்கவும் நிலமும் பொன்னும் தந்த செய்திகளைத் தெரிவிக்கின்றன.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
திருவையாற்றிலிருந்து நிறைய பேருந்து வசதிகள் உள்ளன.
|