|
Home > Temples of India > pADal peRRa sthalam
திருச்சோபுரம் (தியாகவல்லி)
இறைவர் திருப்பெயர் : மங்களபுரீஸ்வரர், திருச்சோபுரநாதர்.
இறைவியார் திருப்பெயர் : தியாகவல்லியம்மை, சத்யதாக்ஷி, வேல்நெடுங்கண்ணி.
தல மரம் : கொன்றை.
தீர்த்தம் : கோயிலுள் உள்ள கிணறும், கோயிலுக்குப் பின்னால் உள்ள குளமுமே.
வழிபட்டோர் : அகத்தியர், காகபுஜண்டரிஷி ஆகியோர்.
தேவாரப் பாடல்கள் : சம்பந்தர்.
தல வரலாறு
சிறப்புக்கள்
- கோயிலுக்குப் பின்னால் அண்மையில் கடல் உள்ளது.
- மணற்பாங்கான பகுதி விசாலமான இடப்பரப்பு.
- திரிபுர சக்கரவர்த்தி, அவர் மனைவி வழிபட்ட லிங்கங்கள் கோயிலுள் உள்ளன.
- கோஷ்ட மூர்த்தத்தில் லிங்கோற்பருக்கு இருபுறங்களிலும் திருமாலும் பிரம்மாவும் நின்று தரிசிக்கும் கோலத்தில் உள்ளனர்.
- கோயில் குருக்கள் குடும்பத்தினரின் நன்முயற்சியால்தான் இக்கோயில் செம்மையாகப் பராமரிக்கப்பட்டு வருகின்றது.
- பிற்காலத்தில், தொண்டை மாநத்தத்தைச் சேர்ந்த மு. துரைசாமி ரெட்டியார் என்பவர் கோயிலில் ஆராதனைக்காக, வீடுகளை விட்டு அதன் வருமானத்தில் ஆராதனை
நடத்துமாறு உயில் சாசனம் எழுதி அதை 26 - 08 - 1912-ல் ஆவணக் காப்பகத்தில் பதிவு செய்துள்ள கல்வெட்டு ஒன்று கோயிலில் உள்ளது.
- சோழர், பாண்டியர் காலக் கல்வெட்டுக்கள் இக்கோயிலுக்கு நிலம் விட்ட செய்தியையும்; தொண்டைமாநல்லூரைக் கோயிலுக்குத் தானமாக அளித்த செய்திகளையும்
தெரிவிக்கின்றன.
- சுந்தரரின் 'திருவிடையாறு' தலப்பதிகத்தில் - ஊர்த்தொகையில் இத்தலம் குறிக்கப்படுகிறது.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
கடலூர் - சிதம்பரம் நெடுஞ்சாலையில் ஆலப்பாக்கம் புகை வண்டி நிலையம், என்று கைகாட்டி உள்ள பாதையில் (இடதுபுறம்) திரும்பிச் (மங்களபுரீஸ்வரர் - தியாகவல்லி
என்று பெயர்ப் பலகை உள்ளது) சென்று, 'இரயில்வே' கேட்டைக் கடந்து நேரே மேலும், சென்று உப்பங்கழியின் மேல்கட்டப்பட்டுள்ள பாலத்தின் வழியாக அக்கரையை
அடைந்து கோயிலை அடையலாம். (கோயிலுக்குச் செல்லும் வழி நொய்ம்மணலாக இருப்பதால் காலையில் 10 மணிக்குள்ளும், மாலையில் 4 மணிக்குப் பிறகும் செல்வது நலம்.)
|