|
Home > Temples of India > pADal peRRa sthalam
திரிசிராப்பள்ளி (திருச்சிராப்பள்ளி)
இறைவர் திருப்பெயர் : மாத்ருபூதேஸ்வரர், தாயுமானேஸ்வரர், தாயுமானவர்.
இறைவியார் திருப்பெயர் : மட்டுவார்குழலி, சுகந்தகுந்தளாம்பிகை.
தல மரம் :
தீர்த்தம் : காவிரி.
வழிபட்டோர் : பிரமன், இந்திரன் சடாயு, சப்தரிஷிகள், திரிசிரன்,
சாரமாமுனிவர், மௌனகுரு, தாயுமானவர் முதலியோர்.
தேவாரப் பாடல்கள் : 1. சம்பந்தர் - நன்றுடையானைத் தீயதிலானை.
2. அப்பர் - மட்டு வார்குழ லாளொடு.
தல வரலாறு
தற்போது மக்களால் திருச்சிராப்பள்ளி, திருச்சி என்று வழங்குகிறது.
எல்லா உயிர்க்கும் தந்தையாகவுள்ள இறைவன் ஒரு பெண்ணுக்கு மகப்பேறு காலத்தில் தாயாக வந்து உதவி செய்தமையால் தாயுமானவர் (தாயும் ஆனவர்) என்று பெயர் பெற்றார்.
திரிசிரன் (மூன்று தலைகளை கொண்ட அசுரன்) வழிபட்ட இடமாதலின் இஃது 'திரிசிராப்பள்ளி ' என்று பெயர் பெற்றது.
சிறப்புக்கள்
இத்தலத்திற்கு தென் கயிலாயம் (தக்ஷிண கைலாசம்) என்றும் பெயருண்டு.
மலையடிவாரத்தில் உள்ள மாணிக்க விநாயகரைத் தொழுதுதான் மலையேற வேண்டும்; வழியில் நூற்றுக்கால் மண்டபமுள்ளது. தொடர்ந்து ஏறிச் சென்றால் மலையின் நடுவிடத்தில் தாயுமானவர் திருக்கோயில் உள்ளது.
மலையின் உச்சியில் "பிள்ளையார் " (உச்சிப் பிள்ளையார்) உள்ளார்.
தாயுமானப் பெருமானைக் காண 258 படிகளைக் கடந்து செல்ல வேண்டும்.
- சந்நிதியில் சம்பந்தரின் பதிகம் சலவைக் கல்லில் பதிக்கப்பட்டுள்ளது.
- தாயுமானவர் இத்தலத்தில் வாழ்ந்தார். இவருடைய குருவே, மௌனகுரு சுவாமிகள்.
- சைவ எல்லப்ப நாவலர் இத்தலத்திற்குத் தல புராணம் (செவ்வந்திப் பிராணம்) பாடியுள்ளார்.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
தமிழகத்தின் பெரு நகரங்களுள் ஒன்று. தமிழகத்தின் எல்லா நகரங்களிலிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன. சென்னையிலிருந்து விரைவுப் பேருந்து மூலமாகவும், புகைவண்டி மூலமாகவும் இத்தலத்தை அடையலாம். புகைவண்டி சந்திப்பு நிலையம். சிவில் விமான நிலையமும் உள்ளது.
See Also:
Baby names in Sanskrit and Tamil
|