|
Home > Temples of India > Padal Perra Thalangal
திருச்சிக்கல்
இறைவர் திருப்பெயர் : நவநீதேஸ்வரர், வெண்ணெய்ப் பிரான்
இறைவியார் திருப்பெயர் : வேல் நெடுங்கண்ணி, சத்தியதாட்சி
தல மரம் : மல்லிகை
தீர்த்தம் : க்ஷ£ர புஷ்கரணி, கயாதீர்த்தம், லட்சுமிதீர்த்தம்
வழிபட்டோர் :,முருகப் பெருமான், திருமால், வசிஷ்டர், காமதேனு
தேவாரப் பாடல்கள் : சம்பந்தர்(வானுலாவுமதி வந்துலவும்)
தல வரலாறு
- வசிஷ்டர், காமதேனுவின் வெண்ணெயினால், சிவலிங்கம் அமைத்து வழிபட்ட பின்னர், அதனை எடுக்கமுடியாது சிக்கிக்கொண்டமையால், சிக்கல் எனப்படுகிறது.
- முருகப் பெருமான், சூரனை வதைக்க, அம்பிகையிடம் வேல் பெற்ற இடம்.
சிறப்புக்கள்
- இத்தல முருகர், சிங்கார வேலர் என மிகப் புகழ்ப்பெற்றவர்..
- சூர சம்ஹார விழா ,இங்கு மிகச்சிறப்பு.
- கோவில் மலை மேல் உள்ளது. ஸ்கந்தபுராண மஹாத்மியத்தையும், கோவில் தலமரம், வழிபட்ட ரிஷிகள் ஆகியனவைப் பற்றி கூறும் எட்டு கல்வெட்டுகள் உள்ளன.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
நாகப்பட்டிணத்திற்கு மேற்கே 8கீ.மீ.தூரத்தில் உள்ளது.திருவாரூர்,நாகப்பட்டிணம் இடங்களிலிருந்து, பஸ் வசதி உள்ளது.
|