திருச்சேறை

இறைவர் திருப்பெயர்		: செந்நெறியப்பர், சாரபரமேஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்		: ஞானவல்லி.
தல மரம்			: மாவிலங்கை.
தீர்த்தம்				: மார்க்கண்டேய தீர்த்தம்.
வழிபட்டோர்			: மார்க்கண்டேயர், தௌமியமுனிவர் ஆகியோர்.
தேவாரப் பாடல்கள்		: 1. சம்பந்தர் -	முறியுறு நிறமல்கு. 

				  2. அப்பர்   -	1. பெருந்திரு இமவான், 
						2. பூரி யாவரும் புண்ணியம்.

தல வரலாறு

  • வயல் சூழ்ந்த "சேற்றூர் "; இச்சொல் மருவி 'சேறை' என்றாயிற்று.

  • மார்க்கண்டேயரும்; தௌமிய முனிவரும் இத்தலத்தில் வழிபட்டுள்ளனர்.
thiruchERai kOil mukappu thORRamசிறப்புக்கள்

  • செந்நெறியப்பர் கோயிலை மக்கள் வழக்கில் "உடையார் கோயில்" என்று அழைக்கின்றனர்.

  • இக்கோயிலில் மார்க்கண்டேயர் வழிபட்ட அமுதகடேஸ்வர லிங்கம் உள்ளது.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
கும்பகோணத்திலிருந்து 15 கி. மீ. தொலைவில் உள்ளது இத்தலம்; கும்பகோணத்திலிருந்து நகரப் பேருந்துகள் உள்ளன.

< PREV <
காவிரி தென்கரை 94வது
தலம் திருக்குடவாயில்
Table of Contents > NEXT >
காவிரி தென்கரை 96வது
தலம் திருநாலூர்மயானம்