திருச்செம்பொன்பள்ளி (செம்பனார்கோயில்)

இறைவர் திருப்பெயர்		: சொர்ணபுரீஸ்வரர், தேவப்பிரியர், சுவர்ணலட்சுமீசர், செம்பொன்பாள்ளியார்.
இறைவியார் திருப்பெயர்		: மருவார்குழலி, புஷ்பாளகி, தாக்ஷ£யணி, சுகுந்தகுந்தளாம்பிகை, சுகந்தவனநாயகி.
தல மரம்			: வன்னி, வில்வம்.
தீர்த்தம்				: சூரிய தீர்த்தம், காவிரி.
வழிபட்டோர்			: வசிட்டர், அகத்தியர், பிரமன், திருமான், இந்திரன், குபேரன் முதலியோர்.
தேவாரப் பாடல்கள்		: சம்பந்தர், அப்பர்.
cemponpalli temple

தல வரலாறு

  • மக்கள் வழக்கில் செம்பனார்கோயில் என்று வழங்கப்படுகிறது.

  • இத்தலம் தாக்ஷாயணிக்கு அருள்புரிந்ததும், வீரபத்திரர் தோன்றியதுமாகிய சிறப்பினையுடையது.
  • இந்திரன் நீராடி வழிபட்டு விருத்திராசுரனை கொல்ல வச்சிராயுதம் பெற்ற தலம்.

சிறப்புக்கள்

  • இத்தலத்திற்கு இலக்குமிபுரி, இந்திரபுரி, கந்தபுரி என்ற பெயர்களுமுண்டு.
  • இக்கோயில் கோச்செங்கட் சோழனின் திருப்பணியாகும்.
  • கீழே பதினாறும் மேலே பதினாறும் இதழ்களையுடைய தாமரை போன்ற ஆவுடையாரில் மூலவர் - இலிங்கத் திருமேனி - சுயம்பு மூர்த்தமாக காட்சிதருகிறார்.
  • இங்குள்ள வட்டவடிவமான ஆவுடையார் உள்ள திருமேனி திருமாலும், சதுர வடிவுடைய ஆவுடையாருள்ள திருமேனி பிரமனாலும் பூசிக்கப்பட்டதாகும்.
  • தனியேயுள்ள தேவி சந்நிதி தெற்கு நோக்கியது; இத்தலத்திற்கு தென்மேற்கேயுள்ள பறியலூரில் தந்தையான தக்கன் செய்த வேள்விக்குச் செல்லும் கோலத்தில் மேற்கு நோக்கியிருப்பதாகச் செவிவழிச் செய்தி சொல்லப்படுகிறது.
  • சித்திரை 7-ஆம் நாள் முதல் 18-ஆம் நாள் முடிய சூரிய ஒளி சுவாமி மீது படுவதாகச் சொல்லப்படுகிறது. (இந்நாட்களில் விடியற்காலையில் சூரிய வழிபாடு நடைபெறுகிறது.)
  • இக்கோயிலில் சோழர் காலத்திய ஆறு கல்வெட்டுக்கள் உள்ளன; இவை மூன்றாம் குலோத்துங்க சோழன், ராஜாதிராஜசோழ தேவர், தஞ்சை சரபோஜி மன்னர் காலத்தியவை.
  • இக்கோயிலின் அமைப்பு முறை ஜேஷ்டாதேவியின் பிரதிஷ்டை முதலியவைகளைக் கருத்திற்கொண்டு பார்க்கும்போது இக்கோயில் கி. பி. 879 - 907 வரை அரசாண்ட முதலாம் ஆதித்த சோழன் செய்த திருப்பணியாகக் கருத இடமுண்டு என்றும் செய்தி இவ்வாலயத் தலவரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • இவ்வூரில் 8.2.1965- ல் தோற்றுவிக்கப்பட்ட 'மணிவாசக மற்றம்' மிகச் சிறப்பாக பல தெய்வீகப் பணிகளைச் செய்து வருகிறது.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
மயிலாடுதுறை - பொறையாறு பேருந்து சாலையில் உள்ளது. மயிலாடுதுறையிலிருந்து 10 கி. மீ. தொலைவிலுள்ளது; நகரப் பேருந்துகள் செல்கின்றன.

< PREV <
காவிரி தென்கரை 41வது தலம்
திருப்பறியலூர்
Table of Contents > NEXT >
காவிரி தென்கரை 43வது தலம்
திருநனிப்பள்ளி