|
Home > Temples of India > Padal Perra Thalangal
திருச்சாய்க்காடு (சாயாவனம்)
இறைவர் திருப்பெயர் : சாயாவனேஸ்வரர், அமுதேஸ்வரர்
இறைவியார் திருப்பெயர் : குயிலினும் நன்மொழியம்மை
தல மரம் : பைஞ்சாய் (சாய்-கோரை)
தீர்த்தம் : காவிரி, ஐராவத தீர்த்தம்
வழிபட்டோர் : உபமன்யு முனிவர், இந்திரன், ஐராவதம், இந்திரனின் தாயார்,
ஆதிசேடன்
தேவாரப் பாடல்கள் : 1. சம்பந்தர் 1. நித்தலுந்நியமஞ்செய்துநீர்,
2.மண்புகார் வான்புகார்,
2. அப்பர் 1. தோடுலா மலர்கள் தூவி,
2. வானத் திளமதியும்பாம்புந்
3. ஐயடிகள் காடவர்கோன் அஞ்சனஞ்சேர் கண்ணார் 15-வது பாடல்
தல வரலாறு
பைஞ்சாய் எனும் கோரைப்புற் காடாக இருந்ததால், இத்தலம் இப்பெயர் பெய்ற்றது.
- ஆதிசேடனது நாகமணி ஒளி வீசியதாலும் (இதனை சாய் - ஒளி என்பர்.) இப்பெயர் பெற்றது.
இயற்பகை நாயனார் வழிபட்டு முத்திப் பெற்றத் தலம். இயற்பகை நாயனாரின் திருவுருவச் சிலை திருக்கோயில் வளாகத்தில்
உள்ளது.
இந்திரன் தாயார் தினமும் இத்தலத்தைப் பூஜித்து வந்தனர். அவரது துயர் நீக்க, இந்திரன் இத்திருமேனியைத் தேவலோகம் கொண்டுபோக எண்ணித் தோண்ட,
இச்சிவலிங்கமோ, பாதாளம் வரை சென்றிருந்தமையால், அவரை மீண்டும் அங்கேயே எழுந்தருளச் செய்தான். அவ்வடு இன்றும் உள்ளது.
சிறப்புக்கள்
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் தேவாரப் பாடல் பெற்றத் திருத்தலம்.
காசிக்குச் சமமான சிறப்புள்ள ஆறு தலங்களுள் ஒன்று. மற்றவை 1. திருவெண்காடு, 2. மயிலாடுதுறை, 3. திருவிடைமருதூர், 4. திருவையாறு 5. திருவாஞ்சியம் .
சோழர் கால கல்வெட்டுகள் பத்தும், பாண்டியரது மூன்றும் ஆக பதிமூன்று கல்வெட்டுகள் உள்ளன.
கோச்செங்கணாரின் மாடக் கோவிலாகும்.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
இது, சீர்காழிக்குத் தென் கிழக்கே12கீ.மீ. தூரத்தில் உள்ளது. சீர்காழி,மயிலாடுதுறை ஆகிய இடங்களிலிருந்து
பஸ் வசதி உள்ளது.
|