திருச்சாத்தமங்கை
(கோயில்சீயாத்தமங்கை, சீயாத்தமங்கை) கோயில் தலவரலாறு
Sthala puranam of Thirusathamangai Temple


இறைவர் திருப்பெயர்		: அயவந்தீஸ்வரர், பிரமபுரீஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்		: உபய புஷ்ப விலோசனி, இருமலர்க்கண்ணம்மை.
தல மரம்			: கொன்றை.
தீர்த்தம்				: கோயிலுக்கு முன் உள்ள தீர்த்தம்; (இதன் மேற்பாதி 
				 சந்திர தீர்த்தம் என்றும், கீழ்ப்பாதி சூரிய தீர்த்தம் 
				 என்றும் சொல்லப்படுகிறது.)
வழிபட்டோர்			: பிரமன், திருநீலநக்கர், திருஞானசம்பந்தர்.
தேவாரப் பாடல்கள்		: சம்பந்தர் - திருமலர்க் கொன்றைமாலை.

தல வரலாறு

 • இவ்வூர் இன்று மக்கள் வழக்கில் கோயில் சீயாத்தமங்கை, சீயாத்தமங்கை, செய்யாத்தமங்கை என்று பல பெயர்களில் வழங்கப்படுகிறது.

 • ஊருக்கு 'சாத்தமங்கை' என்றும், கோயிலுக்கு 'அயவந்தீசம்' என்றும் பெயர்.

 • பிரமன் வழிபட்டுப் பேறு பெற்றத் தலம்.

Sri Ayavantheeswarar temple, Thiruchathamangai.

Sri Ayavantheeswarar temple, Thiruchathamangai.
Sri Ayavantheeswarar temple, Thiruchathamangai.

சிறப்புகள்

 • இத்தலம் திருநீலநக்க நாயனாரின் அவதாரத் தலமாகும். திருநீலநக்க நாயனார், அவருடைய மனைவியின் திருமேனிகள் திருக்கோயிலில் உள்ளன. நாயனாரின் மனைவியின் பெயர் 'மங்கையர்க்கரசி' என்று இங்கு வழக்கில் சொல்லப்படுகிறது.

  	அவதாரத் தலம்	: சாத்தமங்கை (கோயில் சீயாத்தமங்கை, சீயாத்தமங்கை)
  	வழிபாடு		: இலிங்க வழிபாடு.
  	முத்தித் தலம் 	: ஆச்சாள்புரம் (நல்லூர்ப்பெருமணம்)
  	குருபூசை நாள் 	: வைகாசி - மூலம்.
  

 • சோழர் காலக் கல்வெட்டில் இத்தலத்து இறைவன் 'அயவந்தி உடையார் ' என்று குறிக்கப்பட்டுள்ளார்.

 • 'ருத்ர வியாமள தந்திர ' ஆமக முறைப்படி நாடொறும் நான்கு கால பூசைகள் நடைபெறுகின்றன.

அமைவிடம்

	அ/மி. அயவந்தீசுவரர் திருக்கோயில்,
	சீயாத்தமங்கை (அஞ்சல்), 
	நன்னிலம் (வட்டம்).

	தொலைபேசி : 04366 - 2700073, +91-98424 71582.

மாநிலம் : தமிழ் நாடு
திருமருகலிலிருந்து நாகூர் செல்லும் சாலையில் 1-கி. மீ. சென்று, 'கோயில் சீயாத்தமங்கை' என்னும் வழிகாட்டிக் கல் உள்ள இடத்தில் பிரிந்து செல்லும் சாலையில், எதிர்ப்புறமாக 1-கி. மீ. செல்ல வேண்டும். முதலில் வரும் ஊர்ப்பகுதி சீயாத்தமங்கையாகும். சற்று உள்ளே மேலும் சென்றால் கோயில் உள்ள பகுதியான 'கோயில் சீயாத்தமங்கை'யை அடையலாம்.

< PREV <
காவிரி தென்கரை 80வது
தலம் திருமறுகல்
Table of Contents > NEXT >
காவிரி தென்கரை 82வது
தலம் திருநாகைக்காரோணம்


 • திருநீலநக்க நாயனார் வரலாறு (மூலம்)