சக்கரப்பள்ளி (ஐயம்பேட்டை) - Chakkarappalli

இறைவர் திருப்பெயர்		: சக்கரவாகேஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்		: தேவநாயகி
தல மரம்			: வில்வம்
தீர்த்தம்				: காவிரி.
வழிபட்டோர்			: திருமால், சயந்தன், தேவர்கள், சக்கரவாகப்பறவை, 
				 (பிரம்மன் சக்கரவாகப் பறவையாக உருமாறி வழிபட்டார் என்பார்.), 
				 குபேரன், அநவித்யநாதசர்மா, அகவிக்ஞை ஆகியோர்.
தேவாரப் பாடல்கள்		: சம்பந்தர் - படையினார் வெண்மழுப் பாய்புலித்.
Full view of temple

தல வரலாறு

 • சக்கரவாகப் பறவை வழிபட்டதாலும், (சக்கரமங்கை வழிபட்டதாலும்) இவ்வூர் சக்கரப்பள்ளி என்று வழங்கலாயிற்று.

 • மக்கள் வழக்கில் இவ்வூர் ஐயம்பேட்டை என்று வழங்குகிறது. (இப்பெயரில் பல ஊர்கள் இருப்பதால் வழக்கில் இதை தஞ்சாவூர் ஐயம்பேட்டை என்று கூறுகின்றனர்.)

 • திருமால் வழிபட்டுச் சக்கராயுதம் பெற்ற தலம். (சக்கரவாகப் பறவை வழிபட்டத் தலம் என்பாருமுளர்.)

 • பங்குனி மாத சங்கடஹர சதுர்த்தியன்று சூரியன் இவ்விறைவனை வழிபடும் அற்புதக் காட்சியைக் காணலாம்.

சிறப்புக்கள்

 • கருவறை கீழ்ப்புறம் கருங்கல்லாலும் மேற்புறம், விமானம் சுதையாலும் ஆக்கப்பட்டவை.

 • அம்பாள் சன்னதி எதிரில் பெண்களுக்கு மாங்கல்ய பலன் தருவதும், யம பயம் நீக்க வல்லதுமான குங்குலியக் குண்டம் அமைந்துள்ளது.

 • கல்வெட்டுக்களில் இவ்வூர், "குலோத்துங்க சோழவள நாட்டு, விளநாட்டு, இராசேந்திர சோழ சதுர்வேதிமங்கலம்" என்று குறிக்கப்பட்டுள்ளது.

 • (மூன்றாம் குலோத்துங்க சோழனின் 12-ஆவது ஆண்டுக் கல்வெட்டு, இவ்வூர்ச்சபைக்குரிய சில விதிகளைக் கூறுகின்றது. நாற்பது வயதுக்கும் மேற்பட்டவரே ஊர்ச்சபை உறுப்பினராகலாம் என்றும், அவர்களும் பத்து ஆண்டுகளுள் உறுப்பினர்க்கு நிற்காதவராக இருக்க வேண்டும் என்றும் ஊர்ச்சபை விதிகள் கூறப்பட்டுள்ளன.)

view of the vimAnA

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
தஞ்சாவூர் - கும்பகோணம் சாலையில் ஐயம்பேட்டை உள்ளது. கும்பகோணம் - தஞ்சாவூர் புகைவண்டி மார்க்கத்தில் ஐயம்பேட்டை புகைவண்டி நிலையம் உள்ளது. ஊர்ப் பெயர் ஐயம்பேட்டை; கோயில் இருப்பது சக்கரப்பள்ளி என்றபகுதியில்.

தொடர்பு :

 • 04374-292971
 • 09345439743

< PREV <
காவிரி தென்கரை 16வது
தலம் திருப்புள்ளமங்கை
Table of Contents > NEXT >
காவிரி தென்கரை 18வது
தலம் திருக்கருக்காவூர்

சப்த மங்கைத் தலங்கள்:
< PREV <
புள்ளமங்கை
Table of Contents > NEXT >
அரியமங்கை