ஆவூர்ப்பசுபதீச்சுரம் (ஆவூர்) கோயில் தலவரலாறு
Sthala puranam of Avurppasupatheechuram Temple


இறைவர் திருப்பெயர்		: பசுபதீஸ்வரர், அஸ்வத்தநாதர், ஆவூருடையார்
இறைவியார் திருப்பெயர்		: மங்களாம்பிகை, பங்கஜவல்லி.
தல மரம்			: அரசு
தீர்த்தம்				: பிரமதீர்த்தம், காமதேனுதீர்த்தம் முதலியன.
வழிபட்டோர்			: காமதேனு, பிரமன், சப்தரிஷிகள், தேவர்கள், 
				 இந்திரன், சூரியன், நவக்கிரகங்கள், 
				 வசிட்டர் ஆகியோர்.
தேவாரப் பாடல்கள்		: சம்பந்தர் - புண்ணியர் பூதியர் பூதநாதர்.

தல வரலாறு

 • ஊர் - ஆவூர்; கோயில் - பசுபதீச்சுரம்.

 • வசிட்டரால் சாபம் பெற்ற காமதேனு, பிரமன் அறிவுரைப்படி உலகிற்கு வந்து இங்கு வழிபட்டுச் சாபம் நீங்கியதலம். (காமதேனு உலகிற்கு வந்த இடம். கோ + வந்த + குடி = கோவந்தகுடி ஆயிற்று)

 • கயிலையிலிருந்து, ஆதிசேடனுடன் போட்டியிட்டு வாயு தேவனால் கொண்டு வரப்பட்ட இருமலைச் சிகரங்களில் ஒன்று நல்லூரிலும் மற்றது ஆவூரிலும் தங்கியதாகப் புராணவரலாறு கூறுகிறது.

 • இங்குள்ள இரு அம்பிகைகளில், மங்களாம்பிகை குளத்திலிருந்து எடுத்துப் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பங்கஜவல்லி அம்பாள்-இதுவே, பழமையானது. (தேவாரத்தில் 'பங்கயமங்கை விரும்பும் ஆவூர் ' என்று வருகிறது. ஆனால் இங்குச் சிறப்பு மங்களாம்பிகை சந்நிதிக்கே.)

Sri Pasupathishwarar temple, Avurppasupatheechuram.

சிறப்புகள்

 • கோச்செங்கட் சோழன் திருப்பணி - மாடக் கோயில்.

 • மணிகூடம், அசுவத்தவனம் என்பன இத்தலத்தின் வேறு பெயர்கள்.

 • சங்கப்புலவர்கள் ஆவூர் கிழார், ஆவூர் மூலங்கிழார் முதலிய சார்றோர்களைத் தந்த ஊர்.

 • கி. பி. 2-ஆம் நூற்றாண்டில் இவ்வூர் சோழ மன்னர்களின் கோட்டையாக விளங்கியது.

 • கல்வெட்டுச் செய்தியில் "நித்தவிநோத வளநாட்டைச் சேர்ந்த ஆவூர்க் கூற்றத்தைச் சேர்ந்த பசுபதீஸ்வரமுடையார் " என்று இறைவன் குறிக்கப்படுகிறார்.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
கும்பகோணம் - மன்னார்குடி சாலையில் வலங்கைமான் வந்து அங்கிருந்து கோவந்தகுடி வழியாக இத்தலத்தை அடையலாம். கும்பகோணத்திலிருந்து பேருந்துகள் உள்ளன.

< PREV <
காவிரி தென்கரை 20வது
தலம் திருநல்லூர்
Table of Contents > NEXT >
காவிரி தென்கரை 22வது
தலம் திருச்சத்திமுற்றம்