திருப்புக்கொளியூர் (அவிநாசி)

இறைவர் திருப்பெயர்		: அவிநாசி லிங்கேஸ்வரர், அவிநாசிஈஸ்வரர், 
				  அவிநாசிநாதர், பெருங்கேடிலியப்பர்.
இறைவியார் திருப்பெயர்		: கருணாம்பிகை, பெருங்கருணை நாயகி.
தல மரம்			: பாதிரி (ஆதியில் மாமரம்) 
தீர்த்தம்				: காசிக்கிணறு, நாகக்கன்னிகைத் தீர்த்தம், ஐராவதத்தீர்த்தம்.
வழிபட்டோர்			: 
தேவாரப் பாடல்கள்		: சுந்தரர் - எற்றான் மறக்கேன்.

தல வரலாறு

  • பழைய பதியாகிய புக்கொளியூர் நத்தம் தற்போது அழிந்து வெட்டவெளியாகவுள்ளது. பிற்காலத்தில் தோன்றிய நகரமே தற்போதுள்ள அவிநாசியாகும்.

  • அவிநாசி - விநாசம் இல்லாதது. ஊர்ப்பெயர் - புக்கொளியூர், இறைவன் - அவிநாசி, இறைவன் பெயரே இன்று ஊர்ப்பெயராயிற்று.

  • இக்கோயிலில் முதலில் உள்ள வழிகாட்டி விநாயகரை தரிசித்து, பிறகு தவத்திலிருக்கும் (பாதிரி மரத்து) அம்பாளைத் தரிசித்து, பிறகுதான் சுவாமியைத் தரிசிக்க வேண்டும்.

avinaci temple

சிறப்புகள்

  • கல்லாலான தீபஸ்(துவஜ)தம்பத்தின் கீழ் தனியே சுந்தரர் உருவம், முதலை பிள்ளையை வெளிப்படுத்தும் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.

  • காலபைரவர் சந்நிதி உள்பிரகாரத்தில் இருப்பது இங்கு மட்டும் தான்; இவருக்கு வடைமாலை அணிவிப்பது விசேஷமான பிரார்த்தனையாம்.

  • கோயிலுக்குப் பக்கத்தில் ஒரு கி.மீ. தொலைவில் முதலையுண்ட பாலனை மீட்ட ஏரியும், கரையில் சுந்தரர் சந்நிதியும் உள்ளது.

  • 1695-ல் வாழ்ந்த சிக்கதேவராய உடையார் காலத்திய கல்வெட்டுக்கள் சுற்றுப்புற மண்டபச் சுவர்களிலும்; சந்நிதித்தூண்களிலும் உள்ளன.

  • தீ விபத்துக்குப் பிறகு, அதை ஈடு செய்யும் வகையில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய தேர் செய்யப்பட்டுள்ளது.

avinaci temple lake

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய ஊர்களிலிருந்து பேருந்தில் செல்லலாம். கோவையிலிருந்து 40 கி. மீ; திருப்பூரிலிருந்து 14 கி. மீ; திருமுருகன்பூண்டியிலிருந்து 5 கி. மீ; கோவை - ஈரோடு நெடுஞ்சாலையில் இத்தலம் உள்ளது.

தொடர்பு :

  • 04296-273113, 09443139503.

< PREV <
பாண்டி நாட்டு 14வது
தலம் திருநெல்வேலி
Table of Contents > NEXT >
கொங்கு நாடு 2வது
தலம் திருமுருகன்பூண்டி