திருஅவளிவணல்லூர் கோயில் தலவரலாறு
Sthala puranam of Avalivanallur Temple


இறைவர் திருப்பெயர்	: சாட்சிநாதர், தம்பரிசுடையார்
இறைவியார் திருப்பெயர்	: சௌந்தரநாயகி, சௌந்தரியவல்லி
தல மரம்		: பாதிரி
தீர்த்தம்			: சந்திர புஷ்கரணி
வழிபட்டோர்		: வராகமூர்த்தி(திருமால்), காசிபர், அகத்தியர், 
			  கண்வர், சூரியன், சந்திரன், முருகப்பெருமான்
தேவாரப் பாடல்கள்	: 1. சம்பந்தர் - கொம்பிரிய வண்டுலவு. 
			  2. அப்பர்   - தோற்றினான் எயிறுகவ்வி.

ஸ்தல புராணம் -

Get the Flash Player to see this player.
தல வரலாறு

  • இத் தலத்தில் பூஜித்துவந்த சிவாச்சாரியாரின் மகள்கள் இருவருள் மூத்தவள், அவள் கணவன் காசியாத்திரை சென்றுவரும் காலத்திற்குள் அம்மைவார்க்கப்பெற்று, உடல் நலம்கெட்டு, உருவின் நிறமாறி இருக்க, காசியாத்திரை சென்றுவந்த கணவன், அவளின் தோற்றத்தைப் பார்த்து, "இவள் என் மனைவியல்லள். இளையவளே என் மனைவி" என்று வாதிட, இறைவன், ரிஷப வாகனத்தில் எழுந்தருளி மூத்தவளே இவரது மனைவி என்னும் பொருள்பட அவள் இவளெனச் சுட்டிக்காட்டிய காரணத்தால், நல்லூர் என்னும் பெயரோடு, அவள் இவள் என்னும் தொடரையும்ச் சேர்த்து, அவளிவணல்லூர் என்ற பெயர் பெற்றது. இத் தல இறைவனின் கர்ப்பகிரகத்தில் இச் செய்தியை உணர்த்தும் பிரதிமைகள் உள்ளன.

  • அம்மை வார்க்கப்பெற்ற சிவாச்சாரியாரின் மூத்தமகள், இத் தல தீர்த்தத்தில் மூழ்கி, உடல் வனப்பும், இழந்த கண்ணையும் பெற்றாள்.

சிறப்புகள்

  • இக்கோவிலில், நான்கு கல்வெட்டுகள் உள்ளன. இரண்டு சோழர் காலத்தவை. மற்றவை மிகச் சிதைந்துள்ளன.

Sri Satchinathar temple, Avalivanallur.

The holy pond of Sri Satchinathar temple, Avalivanallur.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
இஃது, சாலியமங்கலம் இரயில் நிலையத்திலிருந்து வடகிழக்கே 10-கி.மீ. தூரத்தில் உள்ளது. கும்பகோணத்திலிருந்து அம்மாபேட்டை செல்லும் நகரப்பேருந்துகளும், தஞ்சாவூரிலிருந்து அரித்துவாரமங்கலம் செல்லும் நகரப்பேருந்துகளும் இத்தலத்தின் வழியாகவே செல்கின்றன.

தொடர்பு :

  • 04374-316911

< PREV <
காவிரி தென்கரை 99வது
தலம் அரதைப்பெரும்பாழி (அரித்துவாரமங்கலம்)
Table of Contents > NEXT >
காவிரி தென்கரை 101வது
தலம் பரிதிநியமம் (பருத்தியப்பர்கோவில்)