திருவாரூர் - ஆரூர்ப்பரவையுண்மண்டளி கோயில் தலவரலாறு
Sthala puranam of Tiruvarur Paravaiyunmandali Temple


இறைவர் திருப்பெயர்		: தூவாய்நாதர்.
இறைவியார் திருப்பெயர்		: 
தல மரம்			: பாதிரி 
தீர்த்தம்				: கமலாயம்(தேவதீர்த்தம்), சங்கு தீர்த்தம், கயா தீர்த்தம், 
				 வாணி தீர்த்தம்(சரஸ்வதி தீர்த்தம், செங்கழுநீர் ஓடை.
வழிபட்டோர்			: இந்திரன், துர்வாச முனிவர்.
தேவாரப் பாடல்கள்		: சுந்தரர் - தூவாயா தொண்டுசெய்வார்.
paravaiyunmantali temple

தல வரலாறு

 • கீழவீதியில் தேரடியில் ஆரூர்ப்பரவையுள் மண்டளி உள்ளது.

 • வருணன் அனுப்பிய கடலை சுவறச் செய்த இறைவன் எழுந்தருளியுள்ள தலம்.

சிறப்புகள்

 • இக்கோயிலுக்குப் பின்புறம் திருநீலகண்ட நாயனார் கோயிலும்; தெற்குச் சந்நிதியில் பரவை நாச்சியார் கோயிலும் உள்ளன.

 • வீதிவிடங்கர், தேவரகண்டப்பெருமான், தியாகப்பெருமான், ஆடரவக்கிண்கிணிக்காலழகர், செங்கழுநீரழகர், செவ்வந்தித்தோடகர், கம்பிக்காதழகர், தியாகவிநோதர், கருணாகரத் தொண்டைமான், அசைந்தாடும் அப்பர், அடிக்காயிரம் பொன் வழங்கியவர், கமலேசர், செம்பொன் தியாகர், தேவசிந்தாமணி, தியாகசிந்தாமணி முதலாக அறுபதுக்கு மேற்பட்ட பெயர்கள் (தியாகராஜாவுக்குச்) சொல்லப்பட்டுள்ளன.

 • இப்பெருமானுக்குரிய அங்கப் பொருள்களாவன:- 1. ஆடுதண்டு - மணித்தண்டு, 2. கொடி - தியாகக்கொடி, 3. ஆசனம் - இரத்தின சிம்மாசனம், 4. மாலை - செங்கழுநீர்மாலை, 5. வாள் - வீரகண்டயம், 6. நடனம் - அஜபா நடனம், 7. யானை - ஐராவதம், 8. மலை - அரதன சிருங்கம், 9. முரசு - பஞ்சமுக வாத்தியம், 10. நாதஸ்வரம் - பாரி, 11. மத்தளம் - சுத்தமத்தளம், 12. குதிரை - வேதம், 13. நாடு - சோழநாடு, 14. ஊர் - திருவாரூர், 15. ஆறு - காவிரி, 16. பண் - பதினெண்வகைப்பண் என்பனவாகும்.

 • சாயரட்சை பூசையின்போது தேவேந்திரனே வந்து பெருமானைப் பூசிப்பதாக ஐதிகமாதலால் அர்ச்சகர் நீண்ட அங்கி, தலைப்பாகை அணிந்துதான் எதிரில் நின்று பூசை செய்கின்றார்.

 • சப்த விடங்கத் தலங்களுள் ஒன்று. (மற்றவை - 1. நாகைக்காரோணம், 2. திருநள்ளாறு, 3. திருமறைக்காடு, 4. திருக்காறாயில், 5. திருவாய்மூர், 6. திருக்கோளிலி என்பன.)

 • "குவித்தகரம் விரித்தல் செலாக் கோயில்களும் பல உளவால்" எனும் மகாவித்வான், மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் வாக்குக்கேற்ப, திருவாரூர் கோயிலுள் சென்றுவிட்டால் ஏராளமான சந்நிதிகள் இருப்பதால், குவித்த கரங்களை - விரிப்பதற்கு வழியேயில்லையெனலாம்.

 • கமலாயம் - இது ஐந்து வேலிப் பரப்புடையது; (வேலி என்பது நில அளவைமுறை) இதை தேவதீர்த்தம் என்பர்.

 • (கோயில் ஐந்து வேலி, குளம் ஐந்துவேலி, ஓடை ஐந்துவேலி என்பது இங்கு வழங்கும் பழமொழி) கமலாயம் 64 கட்டங்களையுடையது.

 • கீழ்க்கோபுரம் 118 அடி உயரமுள்ளது; மொத்தம் வீதிப் பிரகாரங்களையும் சேர்த்து ஐந்து பிரகாரங்கள்.

 • மழைவேண்டின் இப்பெருமானுக்கு நீர்கட்டுவதும், பசுக்கள் பால் கறக்க உதைத்தால், நன்கு கறக்கஇவர்க்கு அறுகுசாத்தி அதைப் பசுக்களுக்குத் தருதலும் இன்றும் மக்களிடையேயுள்ள நம்பிக்கையாகும்.

 • அம்பாள் கோயிலின் மேற்கு மூலையில் அக்ஷர பீடமுள்ளது; இதில் பீடமும் ஐம்பத்தோரு எழுத்துக்கள் எழுதப்பெற்ற திருவாசியுமே உள்ளது; நின்று தியானித்துச் செல்ல வேண்டும்.

 • பிரகாரத்திலிருந்து வெளிவந்தால் எதிரில் பார்ப்பதீச்சரம். இங்குள்ள தீர்த்தக் கிணறு 'முத்திக்கிணறு' எனப்படும்; இதை மக்கள் உருமாற்றி 'மூக்குத்திக் கிணறு' என்றழைக்கின்றனர்.

 • ஒட்டுத்தியாகர் கோயில் - சுந்தரரைக் கோயிலுள் போகாதவாறு விறன் மிண்டர் தடுக்க, இறைவன் இங்கு வந்து சுந்தரரை ஆட்கொண்டார் என்பர்.

 • "தேவாசிரியம்" எனப்படும் ஆயிரக்கால் மண்டபம் உள்ளது; இது ராஜதானி மண்டபம் என்றும் வழங்கப்படுகிறது.

 • அம்மையின் கோயில் - தேவ நீலோத்பலாம்பாள் (அல்லியங்கோதை) நான்கு திருக்கரங்கள் - இவற்றுள் இடக்கரம்; தோழி இடுப்பில் தூக்கிவைத்துக் கொண்டிருக்கும் முருகனின் தலையைத் தொட்டுக் கொண்டிருக்கிறது; இவ்வமைப்பு மிகவும் அற்புதமானது.

 • எண்ணெய்க் காப்பு மண்டபத்தின் அருகில் இந்திரலிங்கத்தை வணங்கி, அங்குள்ள சதுரக்கல்லின் மேல் நின்று ஏழுகோபுரங்களையும் ஒருசேர ஆனந்தமாகத் தரிசித்துப் பின்பு ஆரூர் அரநெறியை அடைய வேண்டும்.

 • இக்கோயிலில் 65 கல்வெட்டுக்கள் உள்ளன. இவை பெரும்பாலும் சோழர் காலத்தியவை.

paravaiyunmantali temple paravaiyunmantali temple

Paravaiyunmantali temple

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
மயிலாடுதுறை, சிதம்பரம், தஞ்சாவூர், திருச்சி, காரைக்கால் முதலிய ஊர்களிலிருந்து பேருந்துகள் நிரம்பவுள்ளன.

< PREV <
காவிரி தென்கரை 88வது
தலம் திருவாரூ அரநெறி
Table of Contents > NEXT >
காவிரி தென்கரை 90வது
தலம் திருவிளமர்