ஆரூர் அரநெறி (திருவாரூர்)

இறைவர் திருப்பெயர்		: அகிலேஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்		: வண்டார் குழலி, புவனேஸ்வரி.
தல மரம்			: பாதிரி.
தீர்த்தம்				: 
வழிபட்டோர்			: நமிநந்தியடிகள்.
தேவாரப் பாடல்கள்		: அப்பர்  - 	1. எத்தீ புகினும் எமக்கொரு, 
						2. பொருங்கைமதக் கரியுரிவைப்.

ஸ்தல புராணம் -

Get the Flash Player to see this player.
thiruvarur temple

தல வரலாறு

 • இக்கோயில் திருவாரூர்க் கோயிலுக்குள்ளேய தெற்குச் சுற்றில் உள்ளது; இக்கோயில் அசலேச்சரம் என்று வழங்கப்படுகிறது.

சிறப்புகள்

 • இப்பெருமானின் - அசலேசுவரரின் நிழல் கிழக்குத் திசையிலன்றி மற்றத் திசையில் விழுவதில்லை என்ற செய்தி தனி மகிமை வாய்ந்தது.

 • ஆடகேசுவரம் - அப்புத் தலம்; இங்கொரு நாகபிலமுள்ளது.

 • ஆனந்தேஸ்வரம் என்பது மங்கண முனிவரால் ஸ்தாபிக்கப்பட்ட பெருமான் உள்ள இடம்.

 • இதையடுத்துள்ள கோயில் விசுவகர்மேசம் - கருங்கற் கோயில்; அழகான கொடுங்கைகள், சிற்பக் கலைகள் நிறைந்தது.

 • வன்மீகநாதர் சந்நிதியில் வலமாக வரும்போது 'ஐங்கலக்காசு விநாயகர் ' (ஐந்து கலம் பொற்காசு கொண்டு ஆக்கப்பட்டவர் என்பது செவி வழிச் செய்தி) உள்ளார்.

 • தியாகேசர் சந்நிதியில் வலப்பால் ஒரு பீடத்தில் உள்ள பெட்டகத்தில் வீதிவிடங்கராகிய மரகத சிவலிங்கமூர்த்தி உள்ளார். முகம் மட்டுமே தெரியும்; மார்கழி ஆதிரையில் தியாகராசாவின் இடப்பாதத்தையும், பங்குனி உத்தரத்தில் வலப்பாதத்தையும் கண்டு தரிசிக்க வேண்டும். மற்றைய அங்கங்கள் மூடி வைக்கப்பட்டிருக்கும் - அவை மிகவும் இரகசியமானவை.

 • இங்கு நவக்கிரகங்கள் நேர் வரிசையில் உள்ளன.

 • வடக்குப் பிரகாரத்தில் உள்ள ரணவிமோசனேசுவரர் சந்நிதியில் சென்று தொழுதால் ஆறாத புண்கள் ஆறும்; கடன்கள் நீங்கும் என்று சொல்லப்படுகிறது.

 • இக்கோயிலில் இரண்டு சண்டேசுவரர் சந்நிதிகள் உள்ளன. 1. எமசண்டர் - எமனே சண்டராக அமர்ந்திருக்கிறான்; 2. ஆதி சண்டர் - (சண்டேஸ்வரர்).

 • "பிறக்க முத்தி திருவாரூர் " என்று புகழப்படும் சிறப்பினது; மூலாதாரத் தலம்.

 • 'திருவாரூர்த் தேர் ' அழகு; இத்தேர் ஆழித் தேர் என்று பெயர்.

 • தியாகேசர் சந்நிதியில் தேர் வடிவில் ஒரு விளக்கு உள்ளது.

 • பஞ்சபூத தலங்களுள் பிருதிவித்தலம்.

 • பஞ்சமுக வாத்யம் சிறப்பானது - ஒன்று பாம்பு சுற்றியது போலவும், ஒன்று ஸ்வஸ்தி வடிவிலும், ஒன்று தாமரைப்பூப் போலவும், ஒன்று எவ்வித அடையாளமும் இல்லாமலும், நடுவில் உள்ளது பெரியதாகவும் இருக்கும்; மான் தோலால கட்டப்பட்டது. இஃது ஒவ்வொரு முகத்திலும் தனித் தனியாக அடிக்கப்படும்போது ஏழு முறையும்; ஐந்திலும் சேர்ந்து அடிக்கும்போது முகத்திற்கு ஒன்றாக ஐந்து முறையும் அடிக்கப்படும். இங்கு வாசிக்கப்படும் நாதஸ்வரம் - மிகப் பெரியது.

 • எல்லாச் சிவாலயங்களின் சந்நிதித்தியமும் சாயரக்ஷை எனப்படும் திருவந்திக்காப்பு நேரத்தில் இத்தலத்தில் விளங்குவதாக ஐதீகம்.

 • சுந்தரர், திருத்தொண்டத் தொகையைப் பாடுவதற்கு, அடியார்களின் பெருமைகளை விளக்கிய பெருமை இப்பதிக்கேயுரியது.

 • பரவையார் அவதரித்தப் பதி.

 • 'கமலை' என்னும் பராசக்தி தவம் செய்யுமிடம்.

 • க்ஷேத்ரவரபுரம், ஆடகேசுரபுரம், தேவயாகபுரம், முசுகுந்தபுரம், கலிசெலா நகரம், அந்தரகேசுபுரம், வன்மீகநாதபுரம், தேவாசிரியபுரம், சமற்காரபுரம், மூலாதாரபுரம், கமலாலயபுரம் என்பன இத்தலத்திற்குரிய வேறுபெயர்கள்.

 • தியாகராஜ லீலை - மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் பாடியது.

 • அஜபாரஹஸ்யம், தியாகராய லீலை, தியாகராஜபுர மான்மியம் முதலாக 16 நூல்கள் இத்தலத்தைப் பற்றி சமஸ்கிருதத்தில் உள்ளன.

 • செம்பியன்மாதேவி, ஆரூர் அரநெறிக் கோயிலைக் கட்டியதாகக் கல்வெட்டு தெரிவிக்கிறது, ஆண்டொன்றுக்கு ஐம்பத்தாறு திருவிழாக்கள் நடைபெற்றனவாம்.

thiruvarur temple thiruvarur temple

devasiriyan mandapam kamalalayam

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
மயிலாடுதுறை, சிதம்பரம், தஞ்சாவூர், திருச்சி, காரைக்கால் முதலிய ஊர்களிலிருந்து பேருந்துகள் நிரம்பவுள்ளன.

< PREV <
காவிரி தென்கரை 87வது
தலம் திருவாரூர்
Table of Contents > NEXT >
காவிரி தென்கரை 89வது தலம்
திருவாரூர்ப்பறவையுண்மண்டளி