திருநெல்வாயில் அரத்துறை

இறைவர் திருப்பெயர்	: அரத்துறைநாதர், ஆனந்தீஸ்வரர், தீர்த்தபுரீஸ்வரர்
இறைவியார் திருப்பெயர்	: அரத்துறைநாயகி, ஆனந்த நாயகி, திரிபுர சுந்தரி
தல மரம்		: ஆல மரம்
தீர்த்தம்			: நிவா நதி
வழிபட்டோர்		: வால்மீகி முனிவர், அரவான்
தேவாரப் பாடல்கள்	: 1. சம்பந்தர் -	எந்தையீசனெம் பெருமான். 
             2. அப்பர்  -	கடவுளைக் கடலுள்.
			 3. சுந்தரர் -	கல்வாய் அகிலும்.

தல வரலாறு

 • ஊர் பெயர் - நெல்வாயில்; கோயில் - அரத்துறை.

 • இத்தலம் தற்போது திருவரத்துறை, திருவட்டுறை என்றெல்லாம் வழங்குகிறது.

 • நிவாநதிக்கரையில் அமைந்துள்ள திருக்கோயில். நிவா நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டபோது, அதனால் சேதம் உண்டாகாமல் இருக்க நந்தியம்பெருமான் தலையைச் சற்று திரும்பி வெள்ளத்தைப் பார்க்க, வெள்ளம் வடிந்ததாக வரலாறு சொல்லப்படுகிறது.

 • சம்பந்தருக்கு முத்துச்சிவிகை, மணிக்குடை, பொற்சின்னம் அருளப் பெற்ற தலம்.

சிறப்புக்கள்

 • பாடல் பெற்றத் தலங்களில் இஃது நடுநாட்டு முதலாவது தலமாகும்.

 • இப்பதிக்கு தீர்த்தபுரி என்ற பெயரும் உண்டு; இதனாலேயெ இத்தலத்து இறைவன் தீர்த்தபுரீஸ்வரர் என்னும் பெயரையும் கொண்டு விளங்குகிறார்.

 • இத்தலத்தில் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் பெயரில் உள்ள சிவலிங்கங்கள் உள்ளன.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
இது, விழுப்புரம் - திருச்சி ரயில்பாதையில், திருப்பெண்ணாகடதிற்குத் தென்மேற்கே 7-கி. மீ. தூரத்தில் உள்ளது. விருதாச்சலத்திலிருந்து, தொழுதூர் செல்லும் பஸ்களில் கொடிகளம் என்னும் இடத்தில் இறங்கி, தெற்கே 1-கி. மீ. தூரத்தில் இத்தலத்தை அடையலாம். (இன்று, திருவட்டுறை எனப்படுகிறது.)

தொடர்பு :

 • 04143 - 246467

< PREV <
கொங்கு நாட்டு 7வது தலம்
திருக்கருவூரானிலை - (கரூர்)
Table of Contents > NEXT >
நடு நாட்டு 2வது தலம்
திருத்தூங்கானைமாடம்