திருஅரசிலி (ஒழுந்தியாப்பட்டு) கோயில் தலவரலாறு

Sthala puranam of Arasili temple

இறைவர் திருப்பெயர்	: அரசிலிநாதர், ஆலாலசுந்தரர், அஸ்வத்தேஸ்வரர், அரசலீஸ்வரர். 
இறைவியார் திருப்பெயர்	: பெரியநாயகி, அழகியநாயகி.
தல மரம்		: அரச மரம்
தீர்த்தம்			: அரசடித் தீர்த்தக்குளம்.
வழிபட்டோர்		: வாமதேவர்.
தேவாரப் பாடல்கள்	: சம்பந்தர் - பாடல் வண்டறை.

aracili temple

தல வரலாறு

 • அரச மரத்தை இறைவன் வீடாக (இல்லாக) கொண்டமையால் இப்பெயர் பெற்றது.

 • வாமதேவ முனிவர் வழிபட்டுப் பிரதோஷ நாளில் பேறு பெற்றார்.

 • சாளுவ மன்னனும் பிரதோஷ விரதமிருந்து பேறு பெற்றுள்ளான்.

சிறப்புகள்

 • சாளுவ வம்ச மன்னனால் இக்கோயில் கட்டப்பட்டது.

 • இத்தலத்தில் பிரதோஷ வழிபாடு மிகவும் சிறப்புடையதாகும்.

 • மூலவர் - சிவலிங்கத் திருமேனி; குட்டையான பாணம்; ஆவுடையாரும் தாழவுள்ளது.

 • இக்கோயிலில் - வைகாசி விசாகத்தில் பத்து நாட்களுக்கு பெருவிழா நடைபெறுகிறது.

 • இவ்வூரில் வாழ்ந்த அறச்செல்வியார் திருமதி. ஜயலட்சுமி அம்மையார் அவர்கள் கட்டிய திருஞானசம்பந்தர் திருமடம் கோயிலுக்கு அருகில் உள்ளது.

  art in painting

 • சோழர் கால 5 கல்வெட்டுகள் உள்ளன. இவற்றுள் விக்ரம சோழதேவர், குலோத்துங்க சோழ தேவர் ஆகிய இருவரும் குறிப்பிடப்பட்டுள்ளனர். விக்ரமசோழ தேவரின் ஆறாவது ஆட்சியாண்டுக் காலத்தில் இவ்வூர் "ஜயங்கொண்ட சோழ மண்டலத்து ஓய்மானாடான விஜயராஜேந்திர சோழவள நாட்டுப் பெரு வேம்பூர் நாட்டுத் தேவதானம் திருவரைசிலி" என்றும்; பன்னிரண்டாவது ஆட்சியாண்டில் "ஓய் மானாட்டுத் திருவரசிலி" என்றும்; பதினாறாவது ஆட்சியாண்டில் "ஜயங்கொண்ட சோழ மண்டலத்து ஓய்மா னாடான விஜயராஜேந்திர சோழவள நாட்டுப் பெருவேம்பூர் நாட்டுத் திருவரசிலி" என்றும் குறிக்கப் பெற்றுள்ளது.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
வழி பாண்டிச்சேரி - திண்டிவனம் (வழி - கிளியனூர்)சாலையில் ஒழுந்தியாப்பட்டு அருகில் 2-கி. மீ.ல் உள்ளது.

தொடர்பு :

 • 04147-235472

< PREV <
தொண்டை நாட்டு 30வது
தலம் திருவக்கரை
Table of Contents > NEXT >
தொண்டை நாட்டு 32வது
தலம் இரும்பைமாகாளம்