திருஆப்பனூர் திருக்கோயில்
(ஆப்புடையார்கோயில்) தலவரலாறு

இறைவர் திருப்பெயர்		: இடபுரேசர் (ரிஷபுரரேசர்), அன்னவிநோதன், ஆப்புடையார்.
இறைவியார் திருப்பெயர்		: குரவங்கழ் குழலி
தல மரம்			: 
தீர்த்தம்				: வையை, இடபதீர்த்தம்.
வழிபட்டோர்			: 
தேவாரப் பாடல்கள்		: சம்பந்தர் - முற்றுஞ் சடைமுடிமேன்

தலவரலாறு

  • சோழாந்தகன் என்னும் பாண்டிய மன்னன் பொருட்டு ஓர் ஆப்பினிடத்தில் இறைவன் வெளிப்பட்ட தலம்.

  • உலையில் இட்ட வையை ஆற்று மணலை இறைவன் அன்னமாக ஆக்குவித்து "அன்னவிநோதன்" என்று பெயர் பெற்ற அற்புத பதி.

Face of the temple view vimAnam from the pirakAram

சிறப்புகள்

  • இங்குள்ள நடராசர், சிவகாமி மூர்த்தங்கள் பெரியதாகவும், கலையழகு மிக்கதாயும் உள்ளன.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
மதுரையில் மீனாட்சியம்மன் கோயிலுக்குப் பக்கத்தில் வைகை ஆற்றுக்கு அருகில் உள்ளது. மதுரையிலிருந்து நகரப்பேருந்துகள் உள்ளன.

தொடர்பு :

  • 0452-2530173
  • 09443676174

< PREV <
பாண்டி நாட்டு 1வது
தலம் திருஆலவாய் (மதுரை)
Table of Contents > NEXT >
பாண்டி நாட்டு 3வது
தலம் திருப்பரங்குன்றம்