திருஅம்பர்ப் பெருந்திருக்கோயில்

இறைவர் திருப்பெயர்	: பிரமபுரீஸ்வரர், பிரமபுரிநாதர்.
இறைவியார் திருப்பெயர்	: பூங்குழல்நாயகி, சுகந்தகுந்தளாம்பிகை.
தலமரம்			: புன்னை.
தீர்த்தம்			: பிரம தீர்த்தம்.
வழிபட்டோர்		: பிரமன்.
தேவாரப் பாடல்கள்	: சம்பந்தர் - எரிதர அனல்கையில் ஏந்தி

தல வரலாறு

 • இத்தலம் இன்று அம்பர், அம்பல் என்று வழங்கப்படுகிறது.

 • பிரமன் பூசித்துப் பேறு பெற்றத் திருத்தலம்.

 • திருக்கோயிலின் உள்ளே "அன்னமாம் பொய்கை" என்று வழங்கப்படும் கிணறு உள்ளது; பிரமன் இக்கிணற்றுத் தீர்த்தத்தில் நீராடி, கிணற்றருகே உள்ள சிவலிங்க மூர்த்தியை வழிபட்டு அன்ன வடிவம் பெற்ற சாபம் நீங்கப் பெற்றான் என்பது தலவரலாறு.

சிறப்புகள்

 • சோமாசி மாறநாயனாரின் அவதாரப்பதி.
  	அவதாரத் தலம்	: அம்பல் / அம்பர்.
  	வழிபாடு		: குரு வழிபாடு.
  	முத்தித் தலம் 	: திருவாரூர்.
  	குருபூசை நாள் 	: வைகாசி - ஆயில்யம்.
  

 • கோட்செங்கணாரின் மாடக் கோவிலாகும்; இத்திருக்கோயிலே கோட்செங்கச் சோழ நாயனாரின் கடைசித் திருப்பணியாகச் சொல்லப்படுகிறது.

 • சோழர் காலக் கல்வெட்டுகள் நான்கு உள்ளன.

 • மாசி மக நன்னாளில் இத்திருக்கோயில் திருவிழா நடைபெறுகின்றது.

 • மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை இத்தலத்திற்கு தலபுராணம் பாடியுள்ளார்.
அமைவிடம்
	அ/மி. பிரமபுரீஸ்வரர் திருக்கோயில், 
	அம்பல் (அஞ்சல் & வழி), 
	பூந்தோட்டம் (S.O),
	நன்னிலம் (வட்டம்),
	திருவாரூர் (மாவட்டம்) - 609 503. 

	தொடர்பு : 04366-238973

மாநிலம் : தமிழ் நாடு
இப்பதி பூந்தோட்டம் இரயில் நிலையத்திற்குக் கிழக்கே 5-கி.மீ. தூரத்திலிருக்கும் அம்பர் மாகாளத் தலத்திற்குக் கிழக்கே 1-கி.மீ. தூரத்தில் உள்ளது. பூந்தோட்டத்திலிருந்து பேருந்து வசதி உள்ளது.

< PREV <
காவிரி தென்கரை 53வது
தலம் கோட்டாறு
Table of Contents > NEXT >
காவிரி தென்கரை 55வது
தலம் அம்பர் மாகாளம்

 • சோமாசிமாற நாயனார் வரலாறு (மூலம்)