திருஐயாறு (திருவையாறு) கோயில் தலவரலாறு

இறைவர் திருப்பெயர்	: பஞ்சநதீஸ்வரர், ஐயாற்றீசர், செம்பொற்சோதீஸ்வரர், பிரணதார்த்திஹரன்.
இறைவியார் திருப்பெயர்	: அறம்வளர்த்த நாயகி, தர்மசம்வர்த்தினி. 
தல மரம்		: வில்வம். 
தீர்த்தம்			: சூரியபுட்கரணி, காவிரி. 
வழிபட்டோர்		: திருநந்தி தேவர், இலக்குமி, இந்திரன், வருணண், வாலி, 
			 சேரமான் பெருமாள், ஐயடிகள் காடவர்கோன், பட்டினத்துப் பிள்ளையார், 
			 அருணகிரிநாதர். 

தேவாரப் பாடல்கள்	: 1. சம்பந்தர் -	1. கலையார் மதியோடு (1-36), 
					2. பணிந்தவர் அருவினை (1-120), 
					3. புலனைந்தும் பொறிகலங்கி (1-130), 
					4. கோடல் கோங்கங் (2-6), 
					5. திருத்திகழ் மலைச்சிறுமி (2-32); 

			 2. அப்பர் -	1. மாதர் பிறைக்கண்ணியானை (4-3), 
					2. விடகிலேன் அடிநாயேன் (4-13), 
					3. கங்கையை சடையுள் (4-38), 
					4. குண்டனாய்ச் சமணரோடே (4-39), 
					5. தானலா துலக மில்லை (4-40), 
					6. அந்திவட் டத்திங்கட் (4-99), 
					7. குறுவித்த வாகுற்ற (4-91), 
			 		8. சிந்திப் பரியன (4-92), 
					9. சிந்தை வாய்தலு (5-27), 
					10. சிந்தை வண்ணத்த (5-28), 
					11. ஆரார் திரிபுரங்கள் (6-37), 
					12. ஓசை யொலியெலா) (6-38); 
3. சுந்தரர் - பரவும் பரிசொன் (7-77).

தல வரலாறு

 • ஐந்து ஆறுகள் சேரும் இடம் என்பதால், இப் பெயர் பெற்றது.

 • சிவாச்சாரியார் ஒருவர் காசியாத்திரை சென்று உரிய காலத்தில் வர தாமதம் ஏற்பட, இறைவன், சிவாச்சாரியார் வடிவம் கொண்டு தம்மைத் தாமே பூசித்துக்கொண்டார். (இதனை மாணிக்கவாசகர் ஐயாறு அதனிற் சைவனாகியும் என்பார்.)

 • நந்திதேவர் இப்பதியில் ஏழுகோடி முறை உருத்திர ஜபம் செய்து இறைவனால் தீர்த்தமாட்டப் பெற்றார். அது ஐந்து தீர்த்தங்களாகப் புகழ் பெற்றன. அந்த ஐந்து தீர்த்தங்களின் காரணமாக திருவையாறு என அழைக்கப்படுகின்றது.

 • இறைவர், நந்திதேவருக்கு சுயம்ப்ரகாசை என்னும் பெண்ணைத் திருமணம் செய்துவைத்த தலம். இதனைச் சுற்றி ஏழூர்த் தலங்கள் (சப்தஸ்தானம்) இதனோடு தொடர்புடையன.

 • அப்பர் பெருமானுக்குக் கயிலைக் காட்சி அருளிய தலம்.

 • சுந்தரரும் சேரமான் நாயனாரும் தரிசிக்க வரும்போது, காவிரியின் இரு மருங்கிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓட, சுந்தரர் பதிகம் பாட, வெள்ளம் ஒதுங்கி நின்று வழி தந்த பதி.

 • இத்திருக் கோயிலுள் ஐயாறப்பர் கோயில், தென் கயிலைக் கோயில், ஒலோகமாதேவீச்சரம் ஆக மூன்று கோயில்கள் உள்ளன.

silathar

சிறப்புகள்

 • சப்த ஸ்தான தலங்களுள் முதன்மையானது.

 • நந்தி தேவர் திருமண உற்சவமும், சித்திரைப் பெருவிழா உற்சவமும் இன்றும் சிறப்பாக நடைபெறுகிறது.

 • பிற்காலச் சோழர், பாண்டியர் மற்றும் பல்லவர் காலக் கல்வெட்டுகள் உள்ளன.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
தஞ்சாவூருக்கு வடக்கே 10-கி.மீ. தூரத்தில் உள்ளது. தஞ்சாவூர்,கும்பகோணம் ஆகிய இடங்களிருந்து பஸ் வசதி உள்ளது.

தொடர்பு :

 • 0436 - 2260332

< PREV <
காவிரி வடகரை 50வது
தலம் திருப்பழனம்
Table of Contents > NEXT >
காவிரி வடகரை 52வது
தலம் திருநெய்தானம்