விஷ்வக்சேனம்
(விஷ்வக்சேனேசுவரர் திருக்கோவில்)

 
இறைவர் திருப்பெயர்		: பைரவர் (விஷ்வக்சேனேசுவரர் - இவர் சோளீஸ்வரர்  
				  கோயிலில் உள்ளார்.) 
இறைவியார் திருப்பெயர்		:  
தல மரம்			:  
தீர்த்தம்				:  
வழிபட்டோர்			: விஷ்வக்சேனர். 
vishvakshEnam temple entrance

தல வரலாறு

  • இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
  • இக்கோயிலில் பைரவர் சந்நிதி மட்டுமே உள்ளது.
  • சலந்தரனை அழிப்பதற்காக இறைவனால் வழங்கப்பட்ட சக்கராயுதத்தை வீரபத்திரர் மீது பிரயோகப்படுத்தியபோது வீரபத்திரர் அணிந்துள்ள வெண்டலை மாலையில் உள்ள ஒரு தலை அதை விழுங்கிவிட்டது. "சக்கராயுதத்தை இழந்த நான் எவ்வாறு என் காத்தல் தொழிலை செய்வது" என்று திருமால் ஒருசமயம் புலம்பிக் கொண்டிருந்தார். இதைக் கேட்ட விஷ்வக்சேனர் தன்னை திருமால், வயிரவரின் சூலத்தினின்றும் விடுவித்து ஏற்றமையால், தானும் திருமாலுக்கு ஏதேனும் உபாயம் செய்யவிரும்பி, சக்கராயுதத்தை திரும்பப் பெற்றுத்தரும் நோக்குடன் வீரபத்திரர் கோயிலுக்குள் நுழைந்தார். பானுகம்பன் முதலானோர் vishvakshEnam temple entrance விஷ்வக்சேனரைப் பிடித்து வெளியில் தள்ளினர். துயரமுற்ற விஷ்வக்சேனர், முனிவர்கள் சிலர் கூறிய யோசனைப்படி, காஞ்சியை அடைந்து தன் பெயரில் சிவலிங்கம் பிரதிஷ்டை (இம்மூர்த்தம் பிள்ளையார் பாளையம் சோளீஸ்வரர் கோயிலில் உள்ளது.) செய்து வழிபட்டார். உடனே வீரபத்திரர் இவர் முன்தோன்றினார்; விஷ்வக்சேனரும், சக்கராயுத்தை வேண்டி நின்றார். சக்கராயுதம் எம்மிடமில்லை அஃது வெண்டலையின் வாயில் இருக்குமானால் வெண்டலையே கொடுக்க நீ பெற்றுக்கொள் என்றருளினார் வீரபத்திரர். விஷ்வக்சேனர், செய்வதறியாது கலக்கமுற்று நின்றார். பிறகு, அனைவரும் சிரிக்கும்படி, உடம்பையும்-கைகால்களையும் மாற்றி மாற்றி வளைத்தும் கோணலாக்கியும், வாய்-மூக்கினை கோணலாக்கிக் காட்டியும் விகடக் கூத்தாடினார். இதைக் கண்டு அனைவரும் பெரும் நகைப்புக் கொண்டனர். வெண்டலையும் சிரித்தது; சக்கராயுதம் அதன் வாயினின்றும் கீழே விழுந்துவிட்டது. சட்டென்று அச்சக்கராயுதத்தை விநாயகர் எடுத்துக்கொண்டு, மீண்டுமொருமுறை தனக்காக விகடக் கூத்து ஆடுமாறு செய்து, (விகடச் சக்கர விநாயகர் திருவேகம்பத்தில் எழுந்தருளியுள்ளார்; இவரே காஞ்சி நகரின் தல விநாயகராவார்.) அதைக்கண்டு மகிழ்ந்து சக்கரத்தை விஷ்வக்சேனரிடம் தந்தார். விஷ்வக்சேனர் சக்கராயுதத்தை திருமாலிடம் ஒப்படைத்தார். மகிழ்ந்த திருமால் விஷ்வக்சேனருக்கு சேனாதிபதி தலைமையை அளித்தார் என்பது வரலாறு.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
காஞ்சிபுரம் - பிள்ளையார்பாளையம் திருவேகம்பன்தெருவில் இக்கோயில் உள்ளது.

< PREV <
மல்லிகார்ஜுனர் கோயில்
Table of Contents > NEXT >
அகத்தீசுவரர் கோயில்