வயிரவேசம்
(சோளீஸ்வரர் திருக்கோவில்)

இறைவர் திருப்பெயர்		: சோளீஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்		: 
தல மரம்			: 
தீர்த்தம்				: 
வழிபட்டோர்			: 

தல வரலாறு

  • இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
  • ஒரு சமயம் பிரம்மா மேருமலைச் சிகரத்திலுள்ள முஞ்சமான் மலையில் வாழ்ந்துவந்து முனிவர்களிடம் சென்று, "தானே பரப்பிரம்மம்" என்றுரை செய்துகொண்டிருந்தான். முனிவர்களும், வேதங்களும் இதை மறுத்து, சிவபெருமானின் பெருமைகளை எடுத்தியம்பின. அவ்வேளையில் திருமாலும் அங்குத் தோன்றி "நானே கடவுள்" என்று கூறி பிரமனுடன் போர்புரிந்தார். இச்சமயத்தில் சிவபெருமான் அங்கே தோன்றிட, கண்ட திருமால் அஞ்சி அவ்விடத்தினின்றும் அகன்றோடினார். ஆனால் பிரமனோ, இறைவனைப் பார்த்து "என் புத்திரனே வருக" என்று அழைத்தான். பெருமான் சினங்கொண்டார்; அவர் திருவுருவிலிருந்து வயிரவர் தோன்றி, பிரமனை வதம் செய்து, அவனது ஐந்தாவது சிரத்தை நகத்தால் கிள்ளியெறிந்தார். சிவனருனால் பிழைத்தெழுந்த பிரமன் தன் பிழைப் பொறுத்தருள வேண்டி நின்றான்.

  • அதன்பின், சிவபெருமான் வயிரவரிடம், "திருமால் உள்ளிட்டோர்களிடம் சென்று குருதிப்பலி ஏற்று அவர்களுடைய செருக்கை அடக்கி வருக" என்று பணித்தார். வயிரவரும் அவ்வாறே சென்று திருமாலுக்கு வாயிற்காவலில் இருந்த விடுவச்சேனரை சூலத்தால் குத்தி கோர்த்துக்கொண்டு, உட்சென்று திருமாலிடம் ரத்தப்பலி யேற்று அவர் மூர்ச்சையாகுமாறு செய்து திருமாலின் செருக்கை அடக்கினார். வயிரவர் இத்துடன் நில்லாது ஏனைய தேவர்களிடமும் சென்று அவர்கள்தம் செருக்கையடக்குவித்தார். இறைவனிடம் வந்த வயிரவர் வழிபட்டு பணிந்து, பெருமானின் ஆணைப்படி, நகரை காக்கும் காவல் பொறுப்பை ஏற்று, விடுவச்சேனரை (விஷ்வக்சேனர்) சூலத்தினின்றும் விடுவித்து திருமாலிடம் அனுப்பிவிட்டார் என்பது வரலாறு.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
காஞ்சிபுரம் - பிள்ளையார்பாளையத்தில் கடைகோடியில் இக்கோயில் உள்ளது.

< PREV <
வன்மீகநாதேசம்
Table of Contents > NEXT >
தக்கேசம்