வராகேசம்
வராகீஸ்வரர் திருக்கோவில்

இறைவர் திருப்பெயர்		: வராகீஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்		: 
தல மரம்			: 
தீர்த்தம்				: 
வழிபட்டோர்			: திருமால்.

தல வரலாறு

  • இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
  • இத்திருக்கோயில் மிக மிகப் பழமையான கி.மு. ஐந்நூறு ஆண்டுகட்கு முந்தையது என்று சொல்லப்படுகிறது.
  • இரணியாட்சன் என்பவன் பூமியைச் சுருட்டிக்கொண்டு, பாதாலத்தில் போய்ஒளிந்து கொண்டான். திருமால் வராக (பன்றி) உருகொண்டு, இரணியாட்சனை அழித்து பூமியை நிலைபெறச் செய்தார். இதனால் திருமால் செருக்குற்றார். சிவபெருமான் வேடன் வடிவு கொண்டு செருக்குக் கொண்டிருந்த அவ்வராகத்தை அழித்து அதன் கொம்பை தன் மார்பில் அணியாக அணிந்து கொண்டார். தவறையுணர்ந்த திருமால் காஞ்சிக்கு வந்து இறைவனை பிழைப்பொறுத்தருள வேண்டி நின்றார் என்பது வரலாறு.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
காஞ்சிபுரம் - காஞ்சிக்கருகில் உள்ள 'தாமல்' என்னும் கிராமத்திலுள்ள குளத்தின் தென்கரையில் உள்ளது.

< PREV <
உற்றுக்கேட்ட முத்தீசர்கோயில்
Table of Contents > NEXT >
காமேஸ்வரம்