வன்மீகநாதேசம்
வன்மீகநாதர் திருக்கோவில்

 
இறைவர் திருப்பெயர்		: வன்மீகநாதர் 
இறைவியார் திருப்பெயர்		:  
தல மரம்			:  
தீர்த்தம்				:  
வழிபட்டோர்			: இந்திரன். 
vanmIkanAthEsam 

தல வரலாறு

  • இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
  • ஒரு சமயம் தேவர்கள் அனைவரும் ஒன்று கூடி பெரும் புகழ் வேண்டி யாகம் செய்தனர். யாகத்தில் புகழானது பெரும் பளிங்கு மலையாக உண்டாகி நின்றது. அதை தான் ஒருவரேயாக திருமால் கவர்ந்து சென்றார். தன்னை எதிர்த்தவர்களையெல்லாம் வென்று, வில்லைக் கழுத்தில் ஊன்றியவாறே நின்று கொண்டிருந்தார். இந்திரன் காஞ்சிக்கு வந்து சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டு, இறைவன் பணித்தவாறு புற்றின் இடையில் 'செல்' உரு கொண்டு எழுந்து சென்று, திருமால் கழுத்தில் ஊன்றிருந்த வில்லின் நாணை அரித்தான், இதனால் வில்லானது திடீரென நிமிர, திருமாலின் தலையறுந்து வீழ்ந்தது. தேவர்கள் அனைவரும் புகழையடைந்தனர். இந்திரன் இறைவனை மீண்டும் வழிபட்டு திருமாலை உயிர்ப்பித்து தருமாறு வேண்டி நிற்க, இறைவனும் அவ்வாறே செய்தருளினார்.

  • இந்திரன் புற்றினிடத்தில் எழும் வரத்தைப் பெற்றுவழிபட்டமையால், இப்பெருமான் வன்மீகநாதர் [வன்மீகம் - (கரையான்) புற்று] என்று வழங்குகிறார்.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
காஞ்சிபுரம் - சாலாபோகம் தெருவில் சென்று வயல் வெளியில் இருக்கும் இச்சிவலிங்கத் தரிசிக்கலாம்.

< PREV <
திருகச்சிமேற்றளி
Table of Contents > NEXT >
வயிரவேசம்