தக்கேசம்

 
இறைவர் திருப்பெயர்		: தக்கேஸ்வரர். 
இறைவியார் திருப்பெயர்		:  
தல மரம்			:  
தீர்த்தம்				:  
வழிபட்டோர்			: திருமால், தக்கன், தேவர்கள் அனைவரும். 
thakkEsam temple

தல வரலாறு

  • இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
  • சிவபெருமானை மதியாது தக்கன் செய்த வேள்வியில், திருமால் உள்ளிட்ட அனைத்த தேவர்களும் கலந்து கொண்டனர். இறைவனின் கட்டளையின்படி வீரபத்திரர் சென்று வேள்வி முழுவதையும் அழித்து, திருமால் உள்ளிட்ட அனைத்துத் தேவர்களும் தண்டிக்கப்பட்டனர். மனம் வருந்திய திருமால் உள்ளிட்ட அனைவரும் ஒன்றுகூடி தாங்கள் அடிக்கடி இவ்வாறு சிவபெருமானை மறந்து மயங்குதற்குக் காரணம் யாதென்றெண்ணி, சிவபெருமானை வேண்டி நின்றனர். இறைவன் அவர்கள் முன்தோன்றி அவர்கள் அனைவரையும் தக்கனுடன் சென்று காஞ்சியில் வழிபடுமாறு அருளினார். அவர்களும் அவ்வாறே சென்று வழிபட்டனர். தக்கன் தன் பெயரில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டு, இறைவனை மதியாத பாவத்தினின்றும் விடுபட்டான் என்பது தல வரலாறாகும்.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
காஞ்சிபுரம் - பிள்ளையார்பாளையம்; கச்சியப்பன் தெருவில் இக்கோயில் உள்ளது.

< PREV <
வயிரவேசம்
Table of Contents > NEXT >
முப்புராரி கோட்டம்