ரிஷபேசம் - (இடபேசம்)

rishabEsam temple
 
இறைவர் திருப்பெயர்		: ரிஷபேஸ்வரர். 
இறைவியார் திருப்பெயர்		:  
தல மரம்			:  
தீர்த்தம்				:  
வழிபட்டோர்			: ரிஷபம்  

தல வரலாறு

  • இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
  • திருமாலை தாங்கவதால், தன்னைப்போல பலசாலி - ஆற்றலுடையவர் உலகில் எவருமிலர் என்று செருக்குற்றிருந்த கருடனின் செருக்கையடக்க எண்ணிய திருமால், கருடன் மேலமர்ந்து கயிலைக்குச் சென்றார், கருடனை கயிலை வாயிலில் நிறுத்திவிட்டு தான்மட்டும் உள்ளே சென்றார். உள்ளே சென்ற திருமால் நெடுநேரமாகியும் வரவில்லை. கருடனின் செருக்கை உணர்ந்த ரிஷபதேவர், தன்னுடைய சுவாச (சுவாசத்தை உள்ளிலுக்கும்போதும், வெளிவிடும்போதும்) காற்றால் கருடனை முன்னும் பின்னும் அலைக்கழித்தார். இவ்வாறு அலைக்கழிந்ததால் கருடனின் இறகுகள் ஒடிந்துபோக, கருடன் திருமாலை அழைத்தது. திருமால், நடந்தவற்றை இறைவனுக்குத் தெரிவிக்க, இறைவனார் ரிஷபத்தை உள்ளேயழைத்து, தன்ஆணையின்றி இவ்விதம் செய்ததால், அப்பழி நீங்க காஞ்சிக்கு சென்று சிவகங்கையில் நீராடி, சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபாடாற்றுமாறு பணித்தார். ரிஷபதேவரும் அவ்வாறே காஞ்சிக்கு சென்று வழிபட்டார் என்பது வரலாறு.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
காஞ்சிபுரம் - திருவேகம்பத்தில், சிவகங்கை தீர்த்தத்தின் மேற்கு கரையில் உள்ள தனிக்கோயிலாகும்.

< PREV <
வாலீசம்
Table of Contents > NEXT >
கங்கணேசம்