புண்ணியகோடீசம்
புண்ணியகோடீசுவரர் திருக்கோவில்

இறைவர் திருப்பெயர்		: புண்ணியகோடீசுவரர்.
இறைவியார் திருப்பெயர்		: 
தல மரம்			: 
தீர்த்தம்				: 
வழிபட்டோர்			: திருமால், கஜேந்திரம் எனும் யானை.
punniyakOtIsam temple

தல வரலாறு

  • இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
  • இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட்டால் வழிபட்ட புண்ணிய பலன் ஒன்றுக்கு கோடியாக பெருகும் என்று என்று சொல்லப்படுகிறது. ஆதலின் இஃது புண்ணியகோடீசம் எனப்பட்டது.

  • மேக வடிவில் இறைவனைத் தாங்கி திருமால் வழிபட்டார். அவருக்கு பணிசெய்த கஜேந்திரன் யானையை முதலையின் பிடியிலிருந்து மீட்டார். அவ்யானையோடு திருமால் காஞ்சிக்கு வந்து இறைவனை வழிபட்டார். இறைவன் திருமால் முன் தோன்றி மகிழ்ந்து அவருக்கு வேண்டிய வரங்களைக் கொடுத்தருளினார். அவ்வரங்களால் திருமால் 'வரதன்' (வரதராசப்பெருமாள்) என்னும் நாமத்தையும், அவர் தங்கிய இடம் யானையின் பெயரால் (அத்தி - யானை) அத்திகிரி என்னும் பெயரைம் பெற்று சிறப்புற்றன.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
காஞ்சிபுரம் - சின்னகாஞ்சிபுரம் செட்டித் தெருவிலிருந்து வரதராசப் பெருமாள் கோயில் வழியாக சென்றால் புண்ணியகோடீஸ்வர் கோயில் தெருவில் உள்ள இக்கோயிலை அடையலாம்.

< PREV <
கச்சிநெறிக்காரைக்காடு
Table of Contents > NEXT >
சிவாஸ்தானம்