பராசரேசம்
பராசரேஸ்வரர் திருக்கோவில்

இறைவர் திருப்பெயர்		: பராசரேஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்		: 
தல மரம்			: 
தீர்த்தம்				: 
வழிபட்டோர்			: பராசரர்.

தல வரலாறு

  • இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
  • வசிட்ட முனிவரின் மீதுள்ள பகையினால் விசுவாமித்திரர் சுதாசன் என்பவனை ஏவி, வசிட்டருடைய நூறு புதல்வர்களையும் விழுங்குமாறு செய்தார். அவ்வேளையில் வசிட்டரின் மூத்த மகனான சத்திமுனிவரின் மனைவி அதிர்சந்தினி கருவுற்றிருந்தாள். தன் கணவன் விழுங்கப்பட்டமையால், அவள் துயரம் தாளாது தன் வயிற்றைக் கைகளால் அறைந்து கருவை சிதைக்க முயன்றாள். இதைக் கண்டு கலக்கமுற்ற வசிட்ட முனிவர் அவளை தடுத்தார். அவ்வேளையில் அங்கே திருமால் தோன்றி, சிவனிடத்து அன்பும் பக்தியுமுடைய, எல்லா நூல்களையும் கற்றிந்த அறிவிற் சிறந்த ஒருமகன் இப்போதே பிறப்பான் என்றருளினார். அவ்வாறே குழந்தையும் பிறந்தது. அக்குழந்தைக்கு பராசரர் என்று பெயரிட்டு வளர்த்தனர். தன் தாய் மூலமாக தன் தந்தைக்கும் ஏனையோருக்கும் ஏற்பட்டதையறிந்த பராசரர், வசிட்டரின் ஆலோசனைப்படி காஞ்சிக்கு வந்து தன்பெயரில் சிவலிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்டார். சிவபெருமான் மகிழ்ந்து காட்சி தந்து, பராசரர் அவருடைய தந்தையாகிய சத்திமுனிவரைக் காண அருள்செய்தார். மேலும் பராசரர் வேள்வியொன்றை செய்து இறையருளால் அரக்கர்களை அழித்து கோபம் தணிந்து சிவபெருமானை வழிபட்டு வந்தார் என்பது தல வரலாறாகும். பராசரர் பிரதிஷ்டை செய்த அச்சிவலிங்கமே பராசரேசம் எனப்படுகிறது.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
காஞ்சிபுரம் - ஆடிசன்பேட்டை காந்திரோடில் உள்ள வழக்கறுத்தீசர் கோயிலுளுள்ள தனிச்சந்நிதியாகும்.

< PREV <
வசிட்டேசம்
Table of Contents > NEXT >
ஆதீபிதேசம்