|
Home > Temples of India > kAnychipuram thalangkaL
பாண்டவேசம்
இறைவர் திருப்பெயர் : பாண்டவேஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர் :
தல மரம் :
தீர்த்தம் :
வழிபட்டோர் : பாண்டவர்கள்.
தல வரலாறு
- இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
-
பாண்டவர்கள், திரௌபதி, உரோமேசர் முனிவர் முதலிய முனிவர்களும் அவர்கள் மனைவியர்களும் தீர்த்த யாத்திரை
மேற்கொண்டு ஆங்காங்குச் சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்து வணங்கி வந்தனர். காஞ்சிக்கு வந்த அவர்கள் தத்தம்
பெயர்களில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். பாண்டவர்கள் பிரதிஷ்டை செய்து வழிபட்டது பாண்டவேசம் எனப்பட்டது.
-
பாண்டவேசம் எனப்படும் இச்சிவலிங்கத்திற்கு தென்றிசையில் ஈசானன், கயிலாயநாதர் என்னும் பெயரில் சிவலிங்கம்
பிரதிஷ்டை செய்து (இச்சிவலிங்கம் தற்போது இல்லை; கட்டிடங்கள் கட்டும்போது இது காணாது போய்விட்டது என்று
சொல்லப்படுகிறது.) வழிபட்டு வடகிழக்கு திசைக்கு திசைப் பாலகனாகும் பேற்றை அடைந்தான் என்பது வரலாறு
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
காஞ்சிபுரம் - ரயில்வே ரோடில் சென்று தோட்டப்பகுதியில், வெட்ட வெளியில் உள்ள இச்சிவலிங்கத்தை அடையலாம்.
|