பணாமணீசம்

 
இறைவர் திருப்பெயர்		: பணாமணீசர் 
இறைவியார் திருப்பெயர்		:  
தல மரம்			:  
தீர்த்தம்				: அனந்த தீர்த்தம். 
வழிபட்டோர்			: வாசுகி. 
paNAmaNIsam temple 

தல வரலாறு

  • இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
  • திருப்பாற்கடலைக் கடைந்தபொழுது வாசுகிப் பாம்பு விஷத்தைக் கக்கி உலகைத் துன்புறுத்திய தன் தோஷத்தைப் போக்கிக் கொள்ள, அனந்த தீர்த்தத்தை உண்டாக்கி, அதன் கரையில் சிவலிங்கத்தை நிறுவி, தன்னிடத்துள்ள மாணிக்கத்தைச் சுவாமிக்குச் சார்த்தி வழிபட்டு தன் தோஷத்தைப் போக்கிப், பேறு பெற்றது. பாம்பின் மணியாகிய மாணிக்கத்தை கொண்டு வழிபட்டமையால், இவ்விறைவர் "பணாமணீசர்" என்று பெயர் பெற்றார்.

  • வாசுகி - வழிபடுவதுபோல சுவாமிக்கு அருகிலே உள்ளது.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
காஞ்சிபுரம் - சின்னகாஞ்சிபுரம் திருவள்ளுவர் தெருவருகே உள்ளது.

< PREV <
திருவேகம்பம்
Table of Contents > NEXT >
எமதருமலிங்கேசம்