பலபத்திரராமேசம்

 
இறைவர் திருப்பெயர்		: பலபத்திரராமேஸ்வரர். 
இறைவியார் திருப்பெயர்		:  
தல மரம்			:  
தீர்த்தம்				:  
வழிபட்டோர்			: பலராமர். 
palapaththirarAmEsam 

தல வரலாறு

  • இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
  • தீர்த்த யாத்திரை சென்ற பலராமர் சரஸ்வரதி தீரத்தை அடைந்து அங்குள்ள முனிவர்களிடம் காஞ்சியின் பெருமைகளைக் கேட்டறிந்து, பின்னர் காஞ்சி வந்து திருவேகம்பத்தை பணிந்து, அங்கு வீற்றிருந்தருளும் உபமன்யு முனிவரிடம் தீட்சையும்பெற்று, தன் பெயரில் பலபத்திரராமேஸ்வரர் என்று சிவலிங்கமொன்றை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். மகிழ்ந்த இறைவன் அவர்முன் தோன்றி நீங்காத பக்தியை அருளிச் செய்தார். மேலும் அச்சிவலிங்கத்திடத்தே எழுந்தருளியிருந்து அதனை வழிபடுவோருக்கு வேண்டிய போக மோட்சங்களை அருளவும் இசைந்தருளினார் என்பது வரலாறு.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
காஞ்சிபுரத்தில் - பிள்ளையார்பாளையம் திருமேற்றளித் தெருவில் பசுமையான சூழலில் கோயில் அமைந்துள்ளது.

< PREV <
வீரராகவேசம்-லட்சுமணேசம்
Table of Contents > NEXT >
திருகச்சிமேற்றளி