|
Home > Temples of India > kAnychipuram thalangkaL
மணிகண்டீசம் மணிகண்டீஸ்வரர்கோயில்
இறைவர் திருப்பெயர் : மணிகண்டீஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர் :
தல மரம் :
தீர்த்தம் :
வழிபட்டோர் : பிரம்மன், திருமால், அனைத்து தேவர்கள்.
தல வரலாறு
- இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
-
திருப்பாற்கடலை கடைந்தபோது தோன்றிய விஷத்தால் துயருற்று, தங்களைக் காத்துக்கொள்ளும் பொருட்டு அவ்விஷத்தை
இறைவனுக்கு கொடுத்துண்ணுமாறு செய்த பாவம் நீங்குமாறு திருமால், பிரமன் முதலியோர் காஞ்சிக்கு வந்து தங்களைக் காத்த
இறைவனின் மணிகண்டத்திற்கு (கண்டம் - கழுத்து) போற்றி செய்யும் வகையில் "மணிகண்டம்" என்ற பெயரிலேயே சிவலிங்கம்
பிரதிஷ்டை செய்து வழிபட்டு தங்களின் பாவத்தைப் போக்கிக் கொண்டனர் என்பது தல வரலாறாகும். எனவே இத்தலம் மணிகண்டீசம்
என்றும், சுவாமி - மணிகண்டீசுவரர் என்றும் திருநாமம் பெற்று விளங்குகிறது.
- பழைய நூல் ஒன்று இக்கோயிலில் விஷகண்டீசுவரர் சந்நிதி இருந்ததாக தெரிவிக்கிறது.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
காஞ்சிபுரம் - சின்னகாஞ்சிபுரத்தில் கூட்டுறவு அர்பன் வங்கிக்கு எதிர்ப்புறத்தில் இக்கோயில் உள்ளது.
|