மகாலிங்கேசம்
மகாலிங்கேஸ்வரர் திருக்கோவில்

இறைவர் திருப்பெயர்		: மகாலிங்கேஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்		: 
தல மரம்			: 
தீர்த்தம்				: 
வழிபட்டோர்			: பிரம்மன், திருமால்.

தல வரலாறு

  • இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
  • பிரம்மனும், திருமாலும் தம்மில் யார் பெரியவர் என்று செருக்குன்று போர் செய்தனர். சிவபெருமான் அவர்கள் முன்பு தோன்றினார். போர் விளைத்த இருவரும் இறைவனாரின் அடியையும் முடியையும் காணும் பொருட்டு முயன்று தோற்றனர். பின்பு ஆனவ மயக்கந் தௌ¤ந்து இறைவனைப் போற்றித் துதித்து, காஞ்சியில் மகாலிங்கம் என்ற பெயரில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டனர் என்பது தல வரலாறு.

  • மூலவர் மகாலிங்கேஸ்வரர் - பெருக்கேற்ப பெரிய ஆவுடையாரில் மிகப்பெரிய மூர்த்தத்தில் கம்பீரமாக காட்சி தருகிறார்.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
காஞ்சிபுரத்தில் - பெரிய காஞ்சிபுரம் அப்பாராவ் முதலியார் தெருவில் பிரியும் சந்தில் விசாரித்து சென்று இக்கோயிலை கோயிலை அடையலாம்.

< PREV <
இறவாத்தானம்
Table of Contents > NEXT >
வீராட்டகாசம்