மத்தளமாதவேசம்

இறைவர் திருப்பெயர்		: மத்தள மாதவேசுவரர்.
இறைவியார் திருப்பெயர்		: 
தல மரம்			: 
தீர்த்தம்				: 
வழிபட்டோர்			: திருமால்.

தல வரலாறு

  • இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
  • தில்லைத் திருநடனம் கண்ட திருமால், இறைவனின் நடனத்திற்கு தான் மத்தளம் வாசிக்க வேண்டும் என்று விரும்பி இறைவனை வேண்டினார். இறைவனார் காஞ்சியை அடைந்து தம்மை வழிபடுமாறு பணித்தார். திருமாலும் காஞ்சியை அடைந்து மத்தள மாதவேசர் என்ற பெயரில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அப்போது இறைவன் தோன்றி காப்பு நடனமாடி அருள்புரிய திருமால் அந்நடனத்திற்கு மத்தளம் வாசித்து மகிழ்ந்தார்.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
காஞ்சிபுரத்தில் - திருவேகம்ப உள்பிரகாரத்தில் ஆறுமுகர் சந்தியை அடுத்துள்ள மார்க்கண்டேய லிங்கத்திற்கு பக்கத்தில் உள்ள சிவலிங்கமே மத்தள மாதவேசம் ஆகும்.

< PREV <
அகத்தியேச்சரம்
Table of Contents > NEXT >
ஆயிரத்தெட்டு சிவலிங்கம்