|
Home > Temples of India > kAnychipuram thalangkaL
காயாரோகணம் காயாரோகணேஸ்வரர் கோயில்
இறைவர் திருப்பெயர் : காயாரோகணேஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர் :
தல மரம் :
தீர்த்தம் :
வழிபட்டோர் : வியாழன்பகவான் (குரு), மகாலட்சுமி.
தல வரலாறு
- இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
-
பிரம்மனுக்கும், திருமாலுக்கும் தத்தம் காலப்பதம் முடிவுற்றதும் நிலையின்றிப்போக, சிவபெருமான் தோன்றி அவர்களின் திருமேனிகளைத் தன்தோளில் தாங்கி இவ்விடத்து நடனமாடி அருள்செய்தார். அவர்களின் காயத்தை (காயம் - உடம்பு) தன்னுள் ஆரோகணித்துக் கொண்டமையால் இத்தலம் 'காயாரோகணம்' எனப் பெயர்பெற்றது.
- மகாலட்சுமி இத்தலத்து இறைவனை வில்வத்தால் அருச்சித்துத் திருமாலைத் தன் கணவனாகப் பெற்றாள்.
- வியாழ(குரு)பகவான் இங்கு இறைவனை வழிபட்டு, சிவபெருமானின் திருவடியில் மாறாத அன்பு வாய்க்கப் பெற்றார்.
-
குரு, மகாலட்சுமி வழிபாடுகளால் வழிபடுவோருக்கு முறையே ஞானமும், செல்வமும் காயாரோகணப் பெருமானின் அருளால் வாய்க்கப்பெறும் என்பது காஞ்சிபுராணம்.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
காஞ்சிபுரத்தில் - தாயார்குளத்தின் பக்கத்தில் வேகவதியின் கரையில் அமைந்துள்ள கோயிலாகும்.
|