கண்ணேசம்

 
இறைவர் திருப்பெயர்		: கண்ணேசர். 
இறைவியார் திருப்பெயர்		:  
தல மரம்			:  
தீர்த்தம்				:  
வழிபட்டோர்			: திருமால். 

தல வரலாறு

  • இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
  • திருப்பாற்கடலில் தோன்றிய விஷம் உடம்பைத்தாக்க, கரிந்து வெதும்பிய திருமால் காஞ்சியை அடைந்து, கண்ணலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அதுவே கண்ணேசம் எனப்பட்டது. வழிபாட்டின் இறுதியில் இறைவன் திருமாலுக்கு காட்சி தந்து "திருவேம்கத்தில் எம் சந்நிதிக்கு எதிரில் திருமுடியிலுள்ள சந்திரனுக்கு அருகிலிருந்து இவ்வெப்பு நீங்கப் பெறுவாயாக" என்றருளிச் செய்தார். திருமாலும் அவ்வாறே இருந்து அவ்வெப்பு நீங்கப்பெற்று, நிலாத்துண்டப் பெருமாள் என்னும் பெயருடன் விளங்குகிறார்.

  • (திருவேகம்பத்தில் நிலாத்துண்டப் பெருமாள் சந்நிதி இருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது.)

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
காஞ்சிபுரத்தில் - பெரிய காஞ்சிபுரம், செங்கழுநீரோடைத் தெருவில் இக்கோயில் உள்ளது.

< PREV <
அபிராமேசம்
Table of Contents > NEXT >
குமரகோட்டம்