கச்சி மயானம்

இறைவர் திருப்பெயர்		: மயான லிங்கேசர்.
இறைவியார் திருப்பெயர்		: 
தல மரம்			: 
தீர்த்தம்				: 
வழிபட்டோர்			: 
kacchi mayAnam temple

தல வரலாறு

  • இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
  • இது வைப்புத் தலமாகும்.
  • முன்பொருமுறை பண்டாசுரன் பிரமன், திருமால் மற்றுமுள்ள தேவர்கள் அனைவருடைய உடலுள் புகுந்துகொண்டு, அவர்களுடைய வீரியத்தைக் கவர்ந்து கொண்டு அவர்களை வலிமையிழக்கச் செய்தான். இதனால் பண்டாசுரனை ஒடுக்க எண்ணிய இறைவன் காஞ்சியில் சோதிபிழம்பாய்த் தோன்றி, குண்டமமைத்து நெய்யை நிரப்பி, தத்துவங்களைத் தருப்பையாகவும், முக்குணங்களை வேதிகைகளாகவும் கொண்டு அம்பிகையோடு வேள்வி செய்தார். இவ்வேள்வியில் பிரமன் முதலான அனைத்து உயிர்களையும் இட்டார்; அனைத்து உயிர்களும் தீயில் ஒடுங்கின. அப்போது பண்டாசுரன் எதிரே வந்து நிற்க, அவனையும் தீயிலிட்டார். பின் அத்தீயானது இலிங்க வடிவமாகி 'மயானலிங்கம்' என வழங்களாயிற்று.

  • பண்டாசுரனை அழிக்க வேள்வி செய்த அத்தீக்குண்டமே தற்போது கோயிலுள் இருக்கும் சிவகங்கைத் தீர்த்தமாகும்.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
காஞ்சிபுரம் - கச்சிமயானம், திருவேகம்பத்தில் கொடிக்கம்பத்தினை அடுத்துள்ள தனிக்கோயிலாகும்.

< PREV <
அனந்த பத்மநாபேசம்
Table of Contents > NEXT >
திருவேகம்பம்