கச்சபேசம்
கச்சபேஸ்வரர் திருக்கோயில்

இறைவர் திருப்பெயர்		: கச்சபேஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்		: 
தல மரம்			: 
தீர்த்தம்				: 
வழிபட்டோர்			: திருமால், விநாயகர், ஐயனார், துர்க்கை, சூரியன், பைரவர் ஆகியோர்.
kacchabesam temple kacrAja gOpuram kacchabesam temple

தல வரலாறு

  • இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
  • தேவர்களும் அசுரர்களும் திருப்பாற்கடலைக் கடையுங்கால், திருமால் ஆமையாக (கச்சபம ¢) இருந்து மந்தர மலையைத் தாங்கி உதவினாராகையால், அமுதம் கிடைத்தவுடன் செறுக்குற்று உயிர்கள் அனைத்தும் அஞ்சுமாறு கடல்களைக் கலக்கினார். இதைக் கண்ட சிவபெருமான் ஆமையை அழித்து அதன் ஓட்டை, தான் அணிந்திருக்கும் வெண்டலை மாலையின் இடையில் கோர்த்து அணிந்துகொண்டார். தம் செயலுக்கு வருத்தமுற்ற திருமால், காஞ்சியை அடைந்து இங்கேயுள்ள இச்சிவனை வழிபட்டு நீங்காத பக்தியும், வைகுந்த தலைமைப் பதவியும் திரும்பவும் வரப்பெற்றார்.

  • திருமால் ஆமை (கச்சபம் - ஆமை) வடிவில் வழிபட்டதால் இது கச்சபேசம் எனப்பட்டது. சுவாமியும் கச்சபேஸ்வரர் (கச்சபேசர்) என விளங்குகிறார்.

  • விநாயகர், ஐயனார், துர்க்கை, சூரியன், பைரவர் ஆகியோர்களும் இவ்விறைவனை வழிபட்டு பேறுபெற்றுள்ளனர்.
  • கோயிலின் வெளிப்பிரகாரத்தில் சத்தியமொழிவிநாயகர் உள்ளார். இவர் பொய்யாமொழிப் பிள்ளையார் என்று வழங்குகிறார்.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
காஞ்சிபுரம் - கச்சபேசம், பெரிய காஞ்சிபுரம் மேற்கு ராஜவீதியின் தென்கோடியில் உள்ளது.

< PREV <
இஷ்ட்டசித்தீசம்
Table of Contents > NEXT >
சுரகரேசம்