இஷ்டசித்தீசம்

 
இறைவர் திருப்பெயர்		: இஷ்டசித்தீஸ்வரர். 
இறைவியார் திருப்பெயர்		:  
தல மரம்			:  
தீர்த்தம்				:  
வழிபட்டோர்			: ததீச முனிவர். 
ishttasidhIsam temple

தல வரலாறு

  • இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
  • தங்களுக்குள் யார் சிறந்தவர் - அந்தணரா? அரசரா? என்று ததீச முனிவரும் அவர்தம் நண்பருமான குபன் என்னும் அரசனும் மாறுபட்டக் கருத்துக்கொண்டு போர் புரிந்தனர். அரசனாகிய குபன் ததீச முனிவரை வெட்டிவீழ்த்தினான். ததீச முனிவர் வீழ்ந்து இறக்குங்கால் சுக்கிரனை நினைத்து வணங்கினார். அப்போது சுக்கிரர் அவரை உயிருடன் எழுப்பி அழிவுறாத நிலையை அடைய காஞ்சியில் இஷ்டசித்தீசத் தீர்த்தத்தில் மூழ்கிச் சிவனை வழிபடுமாறு அறிவுரை கூறி, அத்தீர்த்தத்தின் பெருமைகளையும் விளம்பினார். ததீச முனிவரும் அவ்வாறே செய்து என்றும் அழிவுறாத வச்சிர யாக்கையைப் பெற்றுக் குபனை அழித்தார்.

  • இத்தீர்த்தத்தில் கடவுளர்களும் தேவதைகள் முதலான பலரும் மூழ்கி பேறு பெற்றுள்ளனர்.
  • வடக்கில் தருமதீர்த்தம், கிழக்கில் அர்த்த தீர்த்தம், தெற்கில் காம தீர்த்தம், மேற்கில் முத்தி தீர்த்தம் ஆகிய நான்கு தீர்த்தங்களையும் தன்னுள்ளே கொண்டுள்ள இத்தீர்த்தத்தில் ஞாயிறு / கார்த்திகை ஞாயிறு ஆகிய நாள்களில் நீராடுவது மிகவும் சிறப்புடையதாகும்.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
காஞ்சிபுரம் - இஷ்டசித்தீசம், கச்சபேசத்துள் குளக்கரையில் தனிக்கோயிலாக உள்ளது.

< PREV <
அரிசாப பயந்தீர்த்ததானம்
Table of Contents > NEXT >
கச்சபேசம்