சந்திரேசம்
சந்திரேஸ்வரர் திருக்கோவில்

 
இறைவர் திருப்பெயர்		: சந்திரேஸ்வரர். 
இறைவியார் திருப்பெயர்		:  
தல மரம்			:  
தீர்த்தம்				:  
வழிபட்டோர்			: சந்திரன். 
chandrEsam 

தல வரலாறு

  • இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
  • சந்திரதீர்த்தம் என்பது தற்போது வெள்ளைக்குளம் என்று வழங்குகிறது.
  • சந்திரன் வழிபட்ட மூர்த்தி இவ்விறைவர். ஆதலின் இக்கோயில் 'சந்திரேசம்' என்று வழங்குகிறது.
  • சந்திர தீர்த்தக் கரையிலிருந்த சந்திரன் வழிபட்ட இச்சிவலிங்க மூர்த்தம் தற்போது அருகிலுள்ள சந்தவெளியம்மன் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதன் அருகில் சந்திரன் திருமேனியுள்ளது.

  • சந்திரனுக்கு சோமன் என்ற பெயருமுண்டு; காஞ்சிபுராணத்தில் இக்கோயில் சோமேச்சரம் என்று குறிப்பிடுவது இங்கே குறிப்பிடத்தக்கது.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
காஞ்சிபுரம் - பெரிய காஞ்சிபுரம் சாலைத் தெருவிற்கு அருகிலுள்ள சந்தவெளியம்மன் கோயிலுக்கு அருகில் உள்ளது.

< PREV <
பருத்தீசம்
Table of Contents > NEXT >
முத்தீசம்