|
Home > Temples of India > kAnychipuram thalangkaL
அத்திரீசம் - குச்சேசம் (சப்த ஸ்தானத் தலம்-2, 3)
இறைவர் திருப்பெயர் :
இறைவியார் திருப்பெயர் :
தல மரம் :
தீர்த்தம் :
வழிபட்டோர் : அங்கிரா, அத்திரி, காசிபர், குச்சர்,
கௌதமர், வசிட்டர், பிருகு முதலானோர்.
தல வரலாறு
- இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
- இது சப்தஸ்தானத் தலங்களுள் இரண்டு முற்றும் மூன்றாவது தலமாகும்.
-
மேற்சொன்ன சப்த (ஏழு) ரிஷிகளும், காஞ்சியில் செய்யும் வழிபாடுகள், தருமங்கள் அனைத்தும் ஒன்றுக்கு பலமடங்காகப் பலன்தர வல்லவை என்பதை பிரமனின் அறிவுரைப்படி அறிந்து, காஞ்சி - திருவேகம்ப சிவகங்கையில் நீராடி, வியாச சாந்தாலீஸ்வரர் கோயிலருகில் தனித்தனியே தத்தம் திருப்பெயர்களில் சிவலிங்கம் ஸ்தாபித்து - தொழுது பேறுபெற்றுள்ளனர்.
- இவர்களுள் அத்திரி முனிவரும் குச்ச முனிவரும் ஸ்தாபித்து வழிபட்டது அத்திரீசம் குச்சேசம் ஆகும்.
- இரு சிவலிங்க மூர்த்தங்களில் - ஒன்று ஆவுடையாருடனும், மற்றது சிறிய பாணவடிவிலும் உள்ளது. இரண்டு சிவலிங்கங்களும் ஒரே கருவறையில் உள்ளது.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
காஞ்சிபுரத்தில் - சின்னகாஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லூரி பகுதியில் சாலையோரத்தில் உள்ளது.
|